அரசு மருத்துவமனையில் பழைய கட்டடம் இடிப்பு

Added : மே 26, 2022 | |
Advertisement
உடுமலை, : அரசு மருத்துவமனை வளாகத்தில், பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.உடுமலை, அரசு மருத்துவமனை வளாகத்தில், 9 கோடி ரூபாய் மதிப்பில், விபத்து சிகிச்சை பிரிவு கட்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக, பழைய கட்டடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில், அருகே, சிகிச்சைப்பிரிவு கட்டடங்கள் உள்ள நிலையில், அதற்கேற்ப பாதுகாப்பு


உடுமலை, : அரசு மருத்துவமனை வளாகத்தில், பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.உடுமலை, அரசு மருத்துவமனை வளாகத்தில், 9 கோடி ரூபாய் மதிப்பில், விபத்து சிகிச்சை பிரிவு கட்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக, பழைய கட்டடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில், அருகே, சிகிச்சைப்பிரிவு கட்டடங்கள் உள்ள நிலையில், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கட்டடக்கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வரும் நிலையில், விரைந்து புதிய கட்டுமான பணிகளை துவக்க உள்ளதாக, பொதுப்பணித்துறையினர் (மருத்துவப்பணிகள்) தெரிவித்துள்ளனர்.

மருத்துவப்பணிகள் துறையினர் கூறியதாவது:மருத்துவமனைக்கு, தினமும், 700க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்றனர். இங்கு, உள்நோயாளியாக தங்கி, சிகிச்சை பெறும் வசதியும் உள்ளது.இதற்காக, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. விபத்து சிகிச்சை பிரிவு கொண்டுவரப்பட்டால், விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவது பெருமளவு தடுக்கப்படும்.பணியின் போது, எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X