நான்கு வழி சாலையை குறுக்கிடும் டூவீலர்கள் ... அதிகரிப்பு

Added : மே 26, 2022 | |
Advertisement
ஒட்டன்சத்திரம், :திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய விழிப்புணர்வு இன்றி நான்கு வழி சாலையை டூவீலர்களில் வருவோர் பொறுமையின்றி கடப்பதால் ,வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் உருவாகின்றன.இதிலும் ஹெல்மெட் அணியாததால் உயிர்பலியும் நடக்கிறது. மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை அமைத்தபோது பல இடங்களில் சர்வீஸ் ரோடு இல்லாமல் போடப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கு நான்கு


ஒட்டன்சத்திரம், :திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய விழிப்புணர்வு இன்றி நான்கு வழி சாலையை டூவீலர்களில் வருவோர் பொறுமையின்றி கடப்பதால் ,வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் உருவாகின்றன.இதிலும் ஹெல்மெட் அணியாததால் உயிர்பலியும் நடக்கிறது. மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை அமைத்தபோது பல இடங்களில் சர்வீஸ் ரோடு இல்லாமல் போடப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கு நான்கு வழிச்சாலைகளை வாகனங்கள் குறுக்கிடுவது அதிகரிக்கிறது. ரோட்டை கடக்கும் இடங்களில் எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் போதிய அறிவிப்பு பலகைகளோ, டேஞ்சர் விளக்குகளோ முறையாக அமைக்கப்படவில்லை. இதில் டூவீலர்களில் வருவோர் போதிய விழிப்புணர்வு இன்றி ரோட்டை கடக்க முற்படுகின்றனர். இவர்களில் பலர் ஹெல்மெட் கூட அணிவதில்லை.ரோட்டை கடக்கும் போது நான்குவழிச்சாலையில் வரும் வாகனங்களால் விபத்துக்களிலும் சிக்குகின்றனர். உயிர்பலியும் நடக்கிறது. சமீபத்தில் ஒட்டன்சத்திரம் -தாராபுரம் நான்கு வழிச்சாலையை டூவீலரில் கடக்க முயன்றவர்கள் மீது லாரி மோதியதில் மூவர் பலியாகினர் .இச் சம்பவம் நடந்த சுவடு ஆறுவதற்குள் லெக்கையன்கோட்டை - அரசப்பிள்ளைபட்டி பைபாஸ் ரோட்டில் பழனி கவுண்டன் புதுார் அருகே பழனிக்கு சென்ற சுற்றுலா வேன் ரோட்டை கடக்க முயன்ற டூவீலர் மீது மீது மோத , 6 பேர் காயம் அடைந்தனர். இரவு நேரங்களில் நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள் தொலைவில் வருவதாக நினைத்து கொண்டு ரோட்டை கடந்து செல்வதால் விபத்தும் ஏற்படுகிறது. டூவீலர்கள் ஓட்டிகள் ரோட்டை கடக்கும் போது சற்று பொறுமை காத்து, வாகனங்கள் வரவில்லை என்பதை உறுதி செய்து ரோட்டை கடந்துசெல்ல போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு போலீஸ் தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை வேண்டும்.............. விழிப்புணர்வு அவசியம் ஓட்டிகளுக்கு நான்குவழிச் சாலையில் பயணிப்பது எப்படி என்ற விழிப்புணர்வு அறவே இல்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். எங்கெல்லாம் இடைவெளி இருக்கிறதோ அங்கெல்லாம் திரும்ப முயற்சி செய்து விபத்தில் மாட்டிக் கொள்கின்றனர். நான்கு வழிச்சாலையில் நடுவில் உள்ள டிரைவரை ஒட்டிய இருசக்கர வாகனங்களில் செல்வதால் விபத்து நேரிடுகிறது. சிறிது துாரம் சென்றால் யூ டர்ன் போட்டு திருப்புவதற்கு வசதி இருக்கும் இடங்களை பயன்படுத்துவதில்லை. அவசரப்பட்டு அதற்கு முன்பே இடைவெளி கிடைத்தால் திரும்பி விடுகின்றனர். நான்குவழி சாலையில் வேகமாக வரும் வாகனங்கள், டூவீலர்கள திடீரென திரும்புவதால் திடீர் பிரேக் போட கவிழும் நிலை உள்ளது. வஞ்சிமுத்து, சமூக ஆர்வலர் ஒட்டன்சத்திரம் ................

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X