இது உங்கள் இடம்: எல்லாரும் மனுநீதிச் சோழன் அல்ல!

Added : மே 26, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீதிபதிகள் துறவிகள் அல்ல... சில நேரங்களில், பணிச்சுமை காரணமாக நெருக்கடிக்கு உள்ளாவர். நானும், அது மாதிரியான சூழ்நிலையை சந்தித்து இருக்கிறேன். அந்த தருணத்தில், நான் கோபமாக பேசிய வார்த்தைகள், சிலரை புண்படுத்தி இருக்கலாம்;

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:




latest tamil news



என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீதிபதிகள் துறவிகள் அல்ல... சில நேரங்களில், பணிச்சுமை காரணமாக நெருக்கடிக்கு உள்ளாவர். நானும், அது மாதிரியான சூழ்நிலையை சந்தித்து இருக்கிறேன். அந்த தருணத்தில், நான் கோபமாக பேசிய வார்த்தைகள், சிலரை புண்படுத்தி இருக்கலாம்; அதற்காக, இப்போது மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பாரபட்சமின்றியே தீர்ப்பு வழங்குகிறோம். அந்தத் தீர்ப்பு, ஒரு தரப்புக்கு மகிழ்ச்சியையும், இன்னொரு தரப்புக்கு வருத்தத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை' என, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகராஜ் ராவ் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை, விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில், நாகராஜ் ராவும் ஒருவர். நீதிபதிகளின் தீர்ப்புகள் மறுபரிசீலனைக்கு உள்ளாவதை, எத்தனையோ வழக்குகளில் பார்த்திருக்கிறோம். இதற்கு முன்னும் ஓய்வு பெறும் நிலையில், நீதிபதிகள் சிலர் வழங்கிய தீர்ப்புகள், இன்றும் விவாதப் பொருளாகவே இருக்கின்றன. பேரறிவாளனை விடுதலை செய்யும் முன், ராஜிவுடன் பரலோகம் போன காவல் துறை அதிகாரிகள், கான்ஸ்டபிள்கள் மற்றும் உடல் சிதறி சின்னாபின்னமாகி, கரிக்கட்டையாகி இறந்து கிடந்தவர்களின் குடும்பத்தினரை பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிறிதும் கவலைப்படவில்லை; அது தான் பொதுமக்களுக்கு பெரும் வருத்தம் தருவதாக உள்ளது.


latest tamil news



'நாட்டாமை தீர்ப்பை மாற்று' என, கிராமங்களில் பஞ்சாயத்து பண்ணும் பேர்வழிகளை மிரட்டுவது போல, உச்ச நீதிமன்ற நீதிபதியை யாரும் மிரட்ட முடியாது. நீதிபதிகளை துறவிகள் என மட்டும் அல்ல... கடவுள்கள் என்று அழைக்கவும் முடியாது. ஏனெனில், கடவுள் வழங்கும் தீர்ப்பு எப்போதும் நியாயமானதாகவே இருக்கும். சாட்சிகள் எதிராக இருந்தால், கற்புக் கரசியரையும் நெறி கெட்டவர்கள் என்று தீர்ப்பு வழங்கியோர் உண்டு.

வக்கீல்களின் வாக்கு சாதுர்யத்தால், எத்தனையோ குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பி நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டும் இருக்கின்றனர். நீதிபதிகளே லஞ்சம் வாங்கி கைதாகும் கொடுமையும், நம் நாட்டில் நடக்கிறது. அப்புறம் எப்படி எல்லா நீதிபதிகளும், மனுநீதிச் சோழன் மாதிரி, பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்குவர் என்று எதிர்பார்க்க முடியும். எல்லாம் அவரவர் தலைவிதியே!

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
26-மே-202215:57:33 IST Report Abuse
sankaseshan நீதிபதிகள் அத்தனை பெரும் உதம்மர் தானா சொல்லுங்கள்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
26-மே-202215:54:58 IST Report Abuse
sankaseshan மனுவுக்கும் கட்டுமர சோழனுக்கும் ஒரு சம்மந்தம் இல்லை புராணத்தில் தனக்கு சாதகமான தகுதிகலை திருதி சுயபுராணம் பேசுவார்கல்
Rate this:
Cancel
26-மே-202215:13:17 IST Report Abuse
ஆரூர் ரங் சட்டத்துக்கு விளக்கம் கொடுக்க மட்டும் கோர்ட் அல்ல. தர்மத்திற்கும் வழி காட்டவே. நாட்டின் இறையாண்மைக்கு முக்கியமாக பாடுபடவேண்டும்🤔 ஒரு பயங்கரவாதியை எக்காரணத்திற்காக விடுவித்தாலும் அது பயங்கரவாதத்திற்கு துணைபோகும்😔 செயலாகத்தான் பார்க்கப்படும். தீர்ப்பால் ஏற்படப்போகும் எதிர்கால விளைவுகளையும் சிந்தித்துதான் தீர்ப்பளிக்க வேண்டும்🙄. பெரும்பாலான நேரங்களில் தீர்ப்பு தேவையில்லை தீர்வுதான் தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X