இன்றும் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | |
Advertisement
சென்னை----பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும், 'தினமலர்' நாளிதழின் 'வழிகாட்டி' நிகழ்ச்சி, இன்று மூன்றாம் நாளாக, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. கடைசி நாளான இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி, கல்வியாளர்கள் கருத்தை கேட்டு, எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்க, மாணவ - மாணவியர் முன்வர வேண்டும்.பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து எந்தவிதமான உயர் கல்வியை தேர்வு

சென்னை----பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும், 'தினமலர்' நாளிதழின் 'வழிகாட்டி' நிகழ்ச்சி, இன்று மூன்றாம் நாளாக, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது.latest tamil news
கடைசி நாளான இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி, கல்வியாளர்கள் கருத்தை கேட்டு, எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்க, மாணவ - மாணவியர் முன்வர வேண்டும்.பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து எந்தவிதமான உயர் கல்வியை தேர்வு செய்வது என்ற குழப்பத்துக்கு விடையளிக்கும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கியது.

'தினமலர்' நாளிதழுடன், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து, இந்த ஆண்டின் வழிகாட்டி நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடத்தப்படுகிறது.முதல் நாளில், விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, ஆடிட்டர் சேகர் உள்ளிட்ட 'டாப் லெவல்' நிபுணர்கள் தொடர்ச்சி 5ம் பக்கம்'தினமலர்' வழிகாட்டி...3ம் பக்கத் தொடர்ச்சிபங்கேற்று, ஆலோசனை வழங்கினர்.இரண்டாம் நாளான நேற்று, முற்பகல் மற்றும் பிற்பகல் என, இரண்டு வேளைகளிலும் கல்வி ஆலோசனை கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

மின்சார வாகனம் மற்றும் தானியங்கி தொழில்நுட்பம் குறித்து, தொழில் முனைவோர் செந்தில்ராஜா, அடிப்படை இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் குறித்து, கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவன பிரதிநிதி பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.படிப்புடன் சேர்ந்து வளர்க்க வேண்டிய திறன்கள் மற்றும் தன்னம்பிக்கை குறித்து, 'தைரோகேர்' நிறுவனர் வேலுமணி மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை வளர்க்கும் முறை குறித்து, 'இன்போசிஸ்' நிறுவன மனிதவள மேலாளர் சுஜித்குமார் ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

கை நிறைய சம்பளம் தரும் 'டாப்' படிப்புகள் குறித்து, கல்வியாளர் ரமேஷ் பிரபா, சி.ஏ., படிப்புகள் குறித்து ராஜேந்திரகுமார், அரசு வேலைவாய்ப்புகள் குறித்து நித்யா, ஐ.டி., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் குறித்து டேவிட் ரத்னராஜ் உள்ளிட்டோர் ஆலோசனை வழங்கினர்.


அரங்குகளில் ஆர்வம்வழிகாட்டி நிகழ்ச்சி வளாகத்தில், ஏராளமான கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் சார்பில், உயர் கல்வி ஆலோசனைக்கான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மாணவர்களும், பெற்றோரும் அங்கு சென்று பல்வேறு படிப்புகள் குறித்து, விரிவாக கேட்டு தெரிந்து கொண்டனர்.எந்தெந்த கல்வி நிறுவனங்களில், என்ன வகை பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன; அவற்றுக்கான மாணவர் சேர்க்கை, கட்டண விகிதம், குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் சம்பள விபரம் போன்றவற்றை, கல்வி நிறுவன அரங்குகளில் மாணவர்களும், பெற்றோரும் தெரிந்து கொண்டனர்.
இன்றுடன் நிறைவு


நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், பொது அறிவு போட்டி நடத்தப்பட்டு, சரியான விடை எழுதியவர்களுக்கு, 'வாட்ச், டேப்லெட்' பரிசாக வழங்கப்பட்டன.மூன்றாம் நாளான இன்றுடன் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இன்றைய நிகழ்விலும் கல்வியாளர்கள், வல்லுனர்கள் பங்கேற்று, உயர் கல்விக்கான ஆலோசனை வழங்க உள்ளனர். இதில் மாணவர்களும், பெற்றோரும் திரளாக வந்து, வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு, கல்வியாளர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.இணைந்த நிறுவனங்கள்!

'தினமலர்' நாளிதழுடன், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து, இந்த ஆண்டின் வழிகாட்டி நிகழ்ச்சியை மூன்று நாட்களும் நடத்துகின்றன. இதில், 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் நிகர்நிலை பல்கலை, சென்னை ஷிவ் நாடார் பல்கலை, டாட் ஸ்கூல் ஆப் டிசைன், வேல்ஸ் நிகர்நிலை பல்கலை, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து, வழிகாட்டி நிகழ்ச்சியை வழங்குகின்றன.


ஆடிட்டர் ராஜேந்திரகுமார் பேசியதாவது:பிளஸ் 2வில், வணிகப்பிரிவு முடித்தவர்கள் டாக்டராக முடியாது; கணிதத்தை படிக்காதவர்கள் இன்ஜினியராக முடியாது.ஆனால், எந்த படிப்பை படித்தாலும், சி.ஏ., எனப்படும் சார்ட்டடு அக்கவுண்டன்சி படிக்கலாம். இதற்கு அடிப்படை கல்வித் தகுதி, பிளஸ் 2 மட்டுமே. சி.ஏ.,க்கு விண்ணப்பித்த பின், வேறு பட்டப் படிப்புகளை தொடரலாம். அதே நேரம், வாரத்தில் ஒரு நாளாவது, 12 மணி நேரம் நிறுவனம், வணிகம் சார்ந்த சட்டங்கள், கணக்குகள், 'லாஜிக்கல் ரீசனிங்' உள்ளிட்டவற்றை படிக்க வேண்டும். படிக்கும் போதே, ஒரு ஆடிட்டரிடம் வேலை பார்க்க வேண்டும். அந்த வேலைக்கும், திறமைக்கேற்ப உதவித் தொகை வழங்கப்படும். முதலில், நான்கு தாள்களுக்கு, 'பவுண்டேஷன்' தேர்வெழுத வேண்டும். அவற்றில், 50 சதவீத மதிப்பெண் எடுத்தாலே, அடுத்த கட்டத்துக்கு போய்விடலாம்.சி.ஏ., படிப்புக்கான தேர்வுகள், மே, நவம்பர் மாதங்களில் நடக்கும். இதற்கு, திட்டமிட்டு படித்தால், மனநிறைவுடன், கைநிறைய சம்பளத்துடன் பணி செய்யும் வகையிலான எதிர்காலம் உண்டு.இவ்வாறு அவர் பேசினார்.


கல்வியாளர் ரமேஷ் பிரபா 'டிப்ஸ்''தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சியில், கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:

தமிழகத்தில் இரண்டு லட்சம் பேர் இன்ஜினியரிங் படிக்கின்றனர். அதில் ஒரு லட்சம் பேர் தான் படிப்பை முழுமையாக முடிக்கின்றனர். நீட் தேர்வுக்கு பலரும் அச்சப்படுகின்றனர். குறிப்பாக, மாணவியர் தவறான முடிவுகள் எடுத்து விடுகின்றனர். ஒரு தேர்வில் நாம் தோல்வி அடைந்தாலும், நமக்கு ஓராயிரம் மாற்று வழிகள் உள்ளன. அதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கால்நடை மருத்துவம் படிப்புக்கு நீட் தேர்வு மதிப்பெண் தேவையில்லை. அரசு கல்லுாரிகளில் மட்டுமே கால்நடை மருத்துவப் படிப்பு வழங்கப்படுவதால், கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. மனித மருத்துவத்தைப் போன்றே கால்நடை மருத்துவத்திலும் பல்வேறு துறைகள் உள்ளன. அதில் மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்.அதேபோல, தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும், அரசு கவின் கலை கல்லுாரிகளில், 'பேச்சுலர் ஆப் பைன் ஆர்ட்ஸ், மாஸ்டர் ஆப் பைன் ஆர்ட்ஸ்' ஆகிய இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. தமிழ்நாடு மீன்வள பல்கலையில், பி.எப்.எஸ்சி., என்ற இளநிலை மீன் வள அறிவியல், பி.எப்.டெக்., என்ற இளநிலை மீன் வள இன்ஜினியரிங் படிப்புகள் உள்ளன.


latest tamil newsதமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 13 கல்லுாரிகள் உள்ளன. அங்கு, வேளாண்மை, வேளாண் மேலாண்மை, வேளாண் இன்ஜினியரிங், தோட்டக்கலை, தோட்டக்கலை தொழில்நுட்பம், காடு வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, வேளாண் தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் உட்பட பல்வேறு தொழில்நுட்ப வேளாண் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

கோவை, திண்டிவனம், தர்மபுரி, ஒரத்த நாடு ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிற்சி மையங்களில் டிப்ளமா படிப்புகளும் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் தற்போது நான்காண்டு பட்டப்படிப்பான, 20 வகையான பி.எஸ்சி., படிப்புகளும்; 21 வகையான பி.காம்., படிப்புகளும் உள்ளன.உயர்கல்வி ஆலோசனை தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, galaxypraba@gmail.com என்ற இ- - மெயில் முகவரியிலும்; 98410 39925 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.-

'நாளிதழ் படியுங்கள்!'

அரசு வேலை வாய்ப்புகள் குறித்து ஆலோசகர் நித்யா கூறியதாவது:ஒரே நாளில் வாழ்க்கைத் தரம் மாற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி போன்ற அரசு வேலைக்கு தேர்வு எழுதுங்கள். கோடிகளை சம்பாதிப்போருக்கு இல்லாத மரியாதை, ஐ.ஏ.எஸ்., படித்தவருக்கும், அரசு வேலையில் சேர்வோருக்கும் கிடைக்கிறது. இளங்கலை பட்டம் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.முதல் கட்டமாக முதல் நிலை தகுதி தேர்வு நடக்கும். அதில், தேர்ச்சி பெறுவோர் பிரதான தேர்வும், அதன்பின், நேர்முக தேர்வில் பங்கேற்க வேண்டும். தேர்வர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, முன்னிலை பெறுவோருக்கு ஐ.ஏ.எஸ்., பணிகள் கிடைக்கும்.இந்த தேர்வில் பங்கேற்க, ஆங்கிலம், தேர்ந்த அறிவு, ஆழ்ந்து படிக்கும் புலமை வேண்டும். கிராமப்புறங்களில் இருந்து வந்த ஏராளமானோர், தமிழில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகள், பொது அறிவு புத்தகங்களைப் படிக்க வேண்டும்.செய்தித் தாள்களை கட்டாயம் வாசிக்க வேண்டும். பொருளாதாரம், கணிதம், அறிவியல், அரசியல், நாட்டு நடப்பு, அரசியல் அமைப்புச் சட்டம், புவியியல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


'தைரோகேர்' ஆய்வகங்களின் நிறுவனருமான வேலுமணி பேசியதாவது:பள்ளி படிப்பை முடித்து, கல்லுாரி மாணவர்கள், தங்களது அடுத்த கட்ட நகர்வை, எப்படி எடுத்து வைக்க வேண்டும் என்பதில், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஏழை குடும்பம்

என்ன படிக்க போகிறோம் என்பதை விட, எப்படி படிக்க போகிறோம் என்ற, இலக்கு வேண்டும். மேலும் படிப்புடன், நுண்ணறிவு திறனை வளர்க்க வேண்டும். நான் சாதாரண கிராமத்தில், மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்து படித்தவன். முன்னாள் முதல்வர் காமராஜரின் மதிய உணவு திட்டத்தில், மதிய உணவு சாப்பிட்டு, படித்த மாணவர்களில் ஒருவன். அதனால், அந்த திட்டத்துக்கு, நான் எப்போதும் நன்றி சொல்ல கூடியவன்.பிளஸ் 2வில் கணிதத்தில், 100க்கு, 100 எடுத்து, பி.காம்., படிப்பில் சேர்ந்தேன். அதன்பின், என் கல்லுாரி பேராசிரியரின் வலியுறுத்தலால், பி.எஸ்சி., படிப்புக்கு மாறினேன். பின், நான் பணியாற்றிய மும்பை நிறுவனத்தின் உரிமையாளரின் உதவியால், 'பயோ டெக்னாலஜி'யில், எம்.எஸ்சி., - பிஎச்.டி., ஆகியவற்றையும் படித்தேன். இதையடுத்து, 15 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் தொழில் முனைவோராக மாறினேன். எங்கள் வங்கி கணக்கில் பெரிய அளவில் நிதியே இல்லாத நிலையில், நான் அரசு வேலையையும், என் மனைவி வங்கி வேலையையும் ராஜினாமா செய்து விட்டு, 'தைரோகேர்' நிறுவனத்தை தைரியமாக துவங்கினோம்.இதற்கு காரணம், துணிச்சலான மற்றும் சுதந்திரமான முடிவெடுக்கும் திறனை வளர்த்து கொண்டதுதான்.எனவே, பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள், எந்த படிப்பு படித்தாலும், உங்களின் அறிவு திறனை வளருங்கள்; எப்போதும் புதிய தேடல் இருக்க வேண்டும்.

மோசமான தோல்வி

எளிமை, குறிப்பிட்ட லட்சியத்தை நோக்கிய செயல்பாடு மற்றும் மனத்திடம் என, எல்லாம் இருக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கு முன், மிகவும் மோசமான தோல்விகள் எல்லாம் வரும். அவற்றை தாங்கி எழுந்து நின்று ஜெயிக்கும் தைரியத்தையும், திறனையும் வளர்த்து கொள்ள வேண்டும். 'ரிஸ்க்' எடுத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

கோவை ராமகிருஷ்ணா கல்லுாரி பேராசிரியர் டேவிட் ரத்னராஜ் பேசியதாவது:தேர்ந்தெடுக்கும் படிப்புக்கு, அடுத்து வரும் 20 -- 30 ஆண்டுகளுக்கு வளர்ச்சி இருக்கும் வகையில், போதுமான கல்வியையும் அறிவு வளத்தையும் வழங்கும் வகையில், திறமையான ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

கோவை ராமகிருஷ்ணா கல்லுாரி பேராசிரியர் டேவிட் ரத்னராஜ் பேசியதாவது:

தேர்ந்தெடுக்கும் படிப்புக்கு, அடுத்து வரும் 20 -- 30 ஆண்டுகளுக்கு வளர்ச்சி இருக்கும் வகையில், போதுமான கல்வியையும் அறிவு வளத்தையும் வழங்கும் வகையில், திறமையான ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.இவை போன்ற காரணிகளை, பல்கலை வழங்கி இருக்கும் 'நாக்' அங்கீகாரத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். தற்போது, தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய துறைகளுக்கு, அதிக வரவேற்பு உள்ளது. ஆனாலும், வாகன தொழில்நுட்பம், கட்டட வடிவமைப்பு, ரோபோட்டிக்ஸ், கருவியியல், சுகாதார பொறியியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கணினி அறிவியலும், தகவல் தொழில்நுட்பமும் பயன்படுகின்றன. அவை, அனைத்து பிரிவு பாடங்களிலும் ஒருங்கிணைந்த படிப்பாக வரும் என்பதால், மாணவர்கள் கவலைப்படாமல் மற்ற பிரிவுகளை தேர்வு செய்யலாம். எந்த பிரிவில் சேர்ந்தாலும், வெற்றிக்கு முதல் படியாகவும் உறுதுணையாகவும் இருப்பது, நல்ல கல்லுாரியும் அதில் உள்ள வசதிகளும் தான்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X