வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்; சிறுத்தையின் கால் தடம் பதிவு

Added : மே 26, 2022 | |
Advertisement
உடுமலை : வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவங்கிய முதல் நாளிலேயே, சரக்குப்பட்டிகேட், எருமமலை புங்கன் ஓடையில் சிறுத்தையின் எச்சம் மற்றும் கால்தடம் கண்டறியப்பட்டது.வனத்தில், வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதை கண்டறியும் வகையில், வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.அவ்வாறு வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தால்,
வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்;  சிறுத்தையின் கால் தடம் பதிவு


உடுமலை : வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவங்கிய முதல் நாளிலேயே, சரக்குப்பட்டிகேட், எருமமலை புங்கன் ஓடையில் சிறுத்தையின் எச்சம் மற்றும் கால்தடம் கண்டறியப்பட்டது.வனத்தில், வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதை கண்டறியும் வகையில், வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.அவ்வாறு வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தால், அதற்கான காரணம் கண்டறியப்பட்டு, தீர்வும் காணப்படுகிறது.

குறிப்பாக, வனங்கள் அழிவு, வேட்டையாடுதல் போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்படுகிறது.அதேசமயம், வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.அதன் அடிப்படையிலேயே, ஆண்டுதோறும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, கோடை மற்றும் குளிர் காலங்களை மையமாகக்கொண்டு, வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், அமராவதி, உடுமலை, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்களில் கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு துவங்கியது.தொடர்ந்து, ஆறு தினங்கள் நடக்கும் கணக்கெடுப்பானது,

மாமிச உண்ணி தடங்கள் கணக்கீடு, நேர்கோட்டு ஆய்வு எனும் இரு முறைகளில் நடத்தப்படுகிறது. இதற்காக, 34 சுற்றுக்களில், 53 நேர் கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.அவ்வகையில், நேற்று நடந்த மாமிச உண்ணி தடங்கள் கணக்கீட்டின்போது, அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட சரக்குப்பட்டிகேட், புங்கன் ஓடை பகுதிகளில் சிறுத்தையின் எச்சம் மற்றும் கால்தடம் கண்டறியப்பட்டது. மேலும், யானைகள், காட்டுமாடுகள் நேரடியாக தென்பட்டது. வனத்துறையினர் கூறியதாவது:கணக்கெடுப்பில், வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் மூன்று தினங்களில், மாமிச உண்ணி தடயங்கள் கணக்கீடு முறையில், புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, கரடி, கழுதைப்புலி, நரி போன்றவற்றின் காலடித் தடம், கழிவு, மரத்தில் பிறாண்டியது, தரையில் கிளறியது, விலங்கினங்கள் எழுப்பும் ஒலி, நேரடியாக காண்பது, தின்று மீதி கிடக்கும் இரை ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.தவிர, காட்டுப்பன்றி கணக்கெடுப்புடன், களைத்தாவரங்களின் அடர்த்தியும் பதிவு செய்யப்படுகிறது. இதையடுத்து வரும் மூன்று தினங்களில், நேர்கோட்டு முறையிலான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.அதில், புள்ளிமான், கடமான், கேளை ஆடு, யானை, காட்டெருது, அனுமான் மந்தி, நீலகிரி கருமந்தி, சிங்கவால் குரங்கு, நாட்டுக்குரங்கு, வராக மான், காட்டுப்பன்றி, குழி முயல் மற்றும் பிற பாலுாட்டிகள் அனைத்தும் மதிப்பிடப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X