அரசு பள்ளியில் 'நீட்' பயிற்சி எப்போது?

Added : மே 26, 2022 | |
Advertisement
திருப்பூர் : மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இதன்படி திருப்பூர், 22 அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு கடந்தாண்டு நிறைவேறியது.நடப்பாண்டில், ஆர்வமும் தகுதியும் உள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், வார இறுதிநாட்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. பொதுத்தேர்வு காரணமாக பயிற்சி தற்காலிகமாக
அரசு பள்ளியில் 'நீட்' பயிற்சி எப்போது?


திருப்பூர் : மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இதன்படி திருப்பூர், 22 அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு கடந்தாண்டு நிறைவேறியது.நடப்பாண்டில், ஆர்வமும் தகுதியும் உள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், வார இறுதிநாட்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பொதுத்தேர்வு காரணமாக பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.தற்போது பிளஸ் 2 தேர்வுகள் முடிந்துவிட்டன. ஆனால் பயிற்சி வகுப்பு குறித்த எந்த அறிவிப்பையும் கல்வித்துறை அமைச்சர் இதுவரை அறிவிக்கவில்லை. ஜூலை 17ம் தேதி நீட் தேர்விற்கு தயாராவது எப்படி என, மாணவர்கள் புலம்புகின்றனர்.மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:நடப்பாண்டு தேர்விற்கு இதுவரை திருப்பூரில், 224 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட, எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். ஒரு மாத காலம் தீவிர பயிற்சிகள் வழங்கினால், அதிக மாணவர்கள், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும்.இப்போதைக்கு வகுப்பாசிரியர் மூலம் வாட்ஸ்அப் குழுக்களில் மாதிரி வினாத்தாள், குறிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மாணவர்களுக்கு போதுமானதாக இருக்காது. காலை முதல் மாலை வரை பயிற்சி நடத்த அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X