நடராஜரை கொச்சைப்படுத்தி 'வீடியோ': நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு மவுனம்

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (56) | |
Advertisement
'ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக, தொடர்ச்சியாக, நடராஜர் நடனம் குறித்து இழிவாக பேசி, சமூக வலைதளத்தில் 'வீடியோ' வெளியிட்டு வரும் ஆசாமியை கைது செய்ய வேண்டும்' என, போராட்டம் வலுத்து வருகிறது. சிதம்பரம் தில்லை நடராஜர் நடனம் குறித்தும், அவரது அசைவுகள் குறித்தும் மிகவும் கீழ்த்தரமாக பேசி, ஆசாமி ஒருவர், சமூக வலைதளத்தில், 'வீடியோ'க்களை வெளியிட்டு

'ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக, தொடர்ச்சியாக, நடராஜர் நடனம் குறித்து இழிவாக பேசி, சமூக வலைதளத்தில் 'வீடியோ' வெளியிட்டு வரும் ஆசாமியை கைது செய்ய வேண்டும்' என, போராட்டம் வலுத்து வருகிறது.latest tamil news


சிதம்பரம் தில்லை நடராஜர் நடனம் குறித்தும், அவரது அசைவுகள் குறித்தும் மிகவும் கீழ்த்தரமாக பேசி, ஆசாமி ஒருவர், சமூக வலைதளத்தில், 'வீடியோ'க்களை வெளியிட்டு வருகிறார்.மைனர் விஜய் எனப்படும் நபர், 'யு 2 புரூட்டஸ்' என்ற பெயரில், 'யு டியூப்' சேனல் நடத்துகிறார். இதில் தான், நடராஜர் குறித்தும், அவரது நடனம் குறித்தும் கேவலமாக பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து அமைப்பினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்து களைத்துப் போய்விட்டனர்.

ஆனால், புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார், மைனர் விஜயின் செயலை ஊக்கப்படுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர்.இரு தினங்களுக்கு முன், இந்த ஆசாமி, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் பிரச்னைகள் குறித்து, வீடியோ வெளியிட்டார். அதில், நடராஜர் ஏன் காலை துாக்கி வைத்திருக்கிறார் என்பதற்கு விளக்கம் அளிப்பது போல, தன் விஷமத்தனத்தை கக்கி உள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில், ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், போலீசார் செவி சாய்ப்பதாக இல்லை.இந்நிலையில், சிதம்பரத்தில், சிவனடியார்கள், 5, 000க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil newsஅப்போது, நடனமாடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கு, திருக்கழுக்குன்றம் திருவாசக சுவாமி சிவதாமோதரன் தலைமை வகித்தார். திருவாரூர் உலக ஆன்மிக சங்கமம் நடராஜ சுவாமிகள், சென்னை திருமடம் பாதவூர் அடிகளார். உ.பி., மாநிலம், காசியாபாத்தில் இருந்து நாராயணன்ஜி, ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.சிவனடியார்கள் கூறுகையில், 'ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஹிந்துக்களை புண்படுத்தும் போக்கு நீடித்து வருகிறது. நடராஜர் நடனம் குறித்து இழிவுபடுத்தி இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. 'இந்த அநாகரீகச் செயலை அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது. மைனர் விஜய்க்கு பின்னணியில் மத மாற்ற கும்பல் இருக்கலாம் என, சந்தேகம் எழுகிறது' என்றனர்

- நமது நிருபர் -.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachiar - toronto,கனடா
26-மே-202217:40:01 IST Report Abuse
Nachiar இந்துக்களுக்கு தமிழ்நாட்டில் சுதந்திரம் இருக்கா நீதி நியாயம் கோர?
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
26-மே-202216:28:11 IST Report Abuse
BALU கைது நடவடிக்கை எடுக்காமல் தூண்டிவிட்டு அயோக்கியர்களுக்குத் துணை போகும் இந்தத் தமிழக அரசை கண்டித்துப் போராட்டம் செய்தீர்களா?? சும்மா இரண்டு மாதம் ஆகியும் மைனர் விஜய்க்கு கண்டனம்னு, போங்க போய் மைனர் விஜய்க்கும் இதுபோன்ற கருப்பர் களவானி கூட்டங்களுக்கு யார் எஜமானன்? என்பதை யோசித்து ,தைரியமா அந்தத் திருடர்களை எதிர்த்துப் போராடுங்கள் சிவனடியார்களே.
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
26-மே-202216:24:18 IST Report Abuse
David DS சிதம்பரம் எம்.பி. திருமா விடம் போய் சொல்லுங்க. அவருக்கு தானே ஒட்டு போட்டு ஜெயிக்க வச்சீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X