புதுச்சத்திரத்தில் 30 ஆயிரம் கிலோ திருடப்பட்ட இரும்பு பறிமுதல்

Added : மே 26, 2022 | |
Advertisement
புதுச்சத்திரம்,-கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த பெரியகுப்பத்தில், நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு, 2,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வந்தன.கடந்த 2011ல் வீசிய 'தானே' புயல் காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் கட்டுமான பணிக்கு வந்த தளவாட பொருட்கள், கம்பெனி வளாகத்திலேயே கிடக்கின்றன.சுற்று வட்டார கிராம மக்கள்,

புதுச்சத்திரம்,-கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த பெரியகுப்பத்தில், நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு, 2,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வந்தன.

கடந்த 2011ல் வீசிய 'தானே' புயல் காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் கட்டுமான பணிக்கு வந்த தளவாட பொருட்கள், கம்பெனி வளாகத்திலேயே கிடக்கின்றன.சுற்று வட்டார கிராம மக்கள், இவற்றை கொள்ளையடித்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.நேற்று முன்தினம் புதுச்சத்திரம் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராமங்களில், தனியார் கம்பெனியில் திருடிய இரும்பு பொருட்களை, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருக்கின்றனரா என, புதுச்சத்திரம் போலீசார் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, நேற்று இரண்டாவது நாளாக பழைய இரும்பு வாங்கும் கடைகளில் அதிரடி சோதனை செய்தனர். இதில், புதுச்சத்திரம் சந்தை அருகே உள்ள பழைய இரும்பு கடையில், கம்பெனியில் திருடிய இரும்பு பொருட்களை வாங்கி, குடோனில் பதுக்கி வைத்திருந்தனர். அங்கிருந்த, 30 ஆயிரம் கிலோ இரும்பு பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X