பிரதமர் படம் வைக்க தி.மு.க.,வினர் எதிர்ப்பு

Added : மே 26, 2022 | |
Advertisement
சிவகாசி,-சிவகாசி மாநகராட்சி கூட்ட அரங்கில், பிரதமர் மோடி படத்தை வைக்க, தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சில் கூட்டம் நடந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.கூட்டம் துவங்கியவுடன் பா.ஜ., கவுன்சிலர் குமரி

சிவகாசி,-சிவகாசி மாநகராட்சி கூட்ட அரங்கில், பிரதமர் மோடி படத்தை வைக்க, தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சில் கூட்டம் நடந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.கூட்டம் துவங்கியவுடன் பா.ஜ., கவுன்சிலர் குமரி பாஸ்கரன், பிரதமர் மோடி படத்தை கூட்ட அரங்கில் வைக்க வேண்டுமென, படத்தை மேயர், கமிஷனரிடம் கொடுக்க வந்தார். அவர்கள் வாங்க மறுத்தனர்.மோடி படத்தை கொடுத்ததற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, வி.சி., கவுன்சிலர் அசோக்குமார், சுயேச்சை கவுன்சிலர் தங்கப்பாண்டி செல்வி ஆகியோர், மன்ற அரங்கில், சட்ட மேதை அம்பேத்கர் படம் வைக்க வேண்டும் என, வாதிட்டனர்.அதற்கும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X