முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பராக் பொறுப்பேற்பு

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி,-நம் ராணுவ விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக கேப்டன் அபிலாஷா பராக் பயிற்சியை வெற்றி கரமாக முடித்து நேற்று பொறுப்பேற்றார்.பிரிட்டன் ராணுவத்தின் ராயல் விமானப் படை, நம் நாட்டில் ராணுவ விமானப் பிரிவை 1942ல் துவங்கியது. இதன் முதல் விமானம் 1947ல் இயங்க துவங்கியது. நம் ராணுவத்துக்கான பிரத்யேக விமானப் படை 1986ல் துவக்கப்பட்டது. இதில், போர் விமானியாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-நம் ராணுவ விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக கேப்டன் அபிலாஷா பராக் பயிற்சியை வெற்றி கரமாக முடித்து நேற்று பொறுப்பேற்றார்.பிரிட்டன் ராணுவத்தின் ராயல் விமானப் படை, நம் நாட்டில் ராணுவ விமானப் பிரிவை 1942ல் துவங்கியது.



latest tamil news


இதன் முதல் விமானம் 1947ல் இயங்க துவங்கியது. நம் ராணுவத்துக்கான பிரத்யேக விமானப் படை 1986ல் துவக்கப்பட்டது. இதில், போர் விமானியாக பெண்கள் இருந்ததில்லை.இந்நிலையில், நம் ராணுவ விமான படையில் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பராக் நேற்று பொறுப்பேற்றார். பயிற்சி முடித்த 36 ராணுவ விமானிகளுடன் அபிலாஷாவும் நேற்று பொறுப்பேற்றார்.


latest tamil news



இது குறித்து ராணுவ அமைச்சகத்தின் தகவல் தொடர்பு கூடுதல் இயக்குனர் நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்த நாள், இந்திய ராணுவ விமானப் படையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். ராணுவ விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக, கேப்டன் அபிலாஷா பராக் வெற்றிகரமாக பயிற்சி முடித்து பொறுப்பேற்றுள்ளார்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KavikumarRam - Indian,இந்தியா
26-மே-202218:25:15 IST Report Abuse
KavikumarRam பெருமைக்குரிய தருணம். வாழ்த்துகள் கேப்டன் அபிலாஷா பராக்.
Rate this:
Cancel
26-மே-202213:20:06 IST Report Abuse
Balaji Radhakrishnan Congrats to women pilot and india moving to equal gender bias.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-மே-202212:06:17 IST Report Abuse
Ramesh Sargam அபிலாஷா பராக் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுபோன்ற பணியில் சேர்ந்து நாட்டை காக்க பெண்கள் வரவேண்டும். சோனியா, மம்தா, மாயாவதி, கனிமொழி போன்று மக்கள் பணிபுரியவே அரசியலுக்கு வந்தேன் என்று பொய் கூறிக்கொண்டு, பதவியில் அமர்ந்தவுடன் ஒரே ஊழல் செய்வது என்ன நியாயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X