காங்கிரசில் இருந்து கபில் சிபலும் விலகல்... ஐந்து மாதங்களில், ஐந்து தலைவர்கள் ஓட்டம்

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (8+ 45) | |
Advertisement
தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், அக்கட்சியிலிருந்துவெளியேறியுள்ளார். உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன், அதிரடியாக ராஜ்யசபாவுக்கு சுயேச்சைஎம்.பி.,யாவதன் பின்னணியில், பல அரசியல் கணக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியாவின் தலைமைக்கு எதிராக, ஜி - 23 எனப்படும், 23 மூத்த தலைவர்கள்

தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், அக்கட்சியிலிருந்துவெளியேறியுள்ளார்.latest tamil newsஉத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன், அதிரடியாக ராஜ்யசபாவுக்கு சுயேச்சைஎம்.பி.,யாவதன் பின்னணியில், பல அரசியல் கணக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியாவின் தலைமைக்கு எதிராக, ஜி - 23 எனப்படும், 23 மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.இந்த அதிருப்தியாளர்களின் குழுவின், மிக முக்கிய முகமே கபில் சிபல் தான். இவர் தான், மூத்த தலைவர்கள் பலரை தன் வீட்டிற்கு அழைத்து, விருந்தளித்து, ஆலோசனை மேற்கொண்டார்.

இன்னொரு மூத்த அதிருப்தி தலைவரான குலாம் நபி ஆசாத், ஊடகங்களில் பேசுவதை தவிர்த்தபோது, அதிரடியாக பேசி, பரபரப்பை ஏற்படுத்தியவரும் கபில் சிபல் தான்.இதற்காகவே, காங்., தொண்டர்கள், டில்லியில் உள்ள இவரது வீட்டை முற்றுகையிட்டு, முட்டை, தக்காளி வீசி எதிர்ப்பு காட்டியதும் நடந்தது. ஆனாலும், 'காங்., கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை' என, கபில் சிபல் கூறியிருந்தார்.


மாற்று வழிராஜ்யசபா எம்.பி.,யான கபில் சிபல், தன் பதவிக் காலம் ஜூலையில் முடிவடைவதால், அது குறித்த சிந்தனையில் இருந்தார். கடந்த 2016ல், அப்போது உ.பி.,யில் ஆளுங்கட்சியாக இருந்த சமாஜ்வாதியின் ஆதரவுடன் தான், காங்கிரஸ் வேட்பாளராக நின்று, கபில் சிபல், ராஜ்யசபா எம்.பி.,யானார். தற்போது உத்தர பிரதேசத்தில், காங்கிரசுக்கு இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். எனவே, நிச்சயம், காங்., சார்பாக நின்று மீண்டும் பதவியை பிடிக்க முடியாது என்பது, கபில் சிபலுக்கு தெரியும்.

இதனால், மாற்று வழிகளை யோசித்தார்.சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்காக, உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளில் கபில் சிபல் ஆஜராகி வருகிறார்.இதனால், இவருக்கு ராஜ்யசபா எம்.பி., சீட் தர, இந்த மூன்று கட்சிகளுமே தயாராக இருந்தன. இருப்பினும், கபில் சிபல் சமாஜ்வாதியை தேர்ந்தெடுக்க சில காரணங்கள் உள்ளன.இவர் அக்கட்சி நிறுவனர் முலாயம் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். 2017ல், முலாயம் குடும்பத்தில் சண்டை வெடித்தபோது, கபில் சிபல் தான் தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு, கட்சியின் சைக்கிள் சின்னத்தை பெற்றுத் தந்தார்.

தவிர, சமாஜ்வாதியில் உட்கட்சிப் பூசல் தற்போது பெரிய அளவில் உள்ளது. குறிப்பாக, சிறையில் இருந்து, சமீபத்தில் ஜாமினில் வந்துள்ள கட்சியின் மூத்த தலைவரான அசம் கான், பெரும் கோபத்தில் உள்ளார். அவரை சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த அகிலேஷ் யாதவுக்கு இருந்த ஒரே வழி, கபில் சிபலுக்கு ராஜ்யசபா சீட் தருவது தான். காரணம்,


கடும் நெருக்கடிஇவர் தான் அசம் கானுக்காக லக்னோ உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, அசம் கானை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வந்தார். மற்றொரு பக்கம், மூத்த தலைவர்கள் பலருக்கும் சீட் கொடுப்பதில், காங்கிரஸ் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, அவரவர் முயற்சியில் 'சீட்' பெற்று ராஜ்யசபாவுக்கு வந்தால் சரி என, அக்கட்சி கருதுவதால், கபில் சிபலின் வெளியேற்றத்தை, காங்கிரசும் வரவேற்பதாகவே தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.யாரும் ஓட வேண்டாம்!


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பாரத ஒற்றுமை யாத்திரையை நடத்தப் போவதாக கூறியுள்ளார். முதலில், காங்கிரசில் இருந்து யாரும் ஓட வேண்டாம் என்ற இயக்கத்தை அவர் நடத்தட்டும்.அமித் மாளவியாசெய்தித் தொடர்பாளர், பா.ஜ.,


latest tamil news


வெளியேறுவது தொடர்கிறது!


காங்கிரஸ் கட்சியில் இருந்து, கடந்த சில ஆண்டுகளில் ஜோதிராதித்ய சிந்தியா, அமரீந்தர் சிங் என, பல மூத்த தலைவர்கள் வெளியேறியுள்ளனர். கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், சுனில் ஜாக்கர், ஹர்திக் படேல், அஸ்வினி குமார், ஆர்.பி.என்.சிங் மற்றும் கபில் சிபல் என, முக்கிய தலைவர்கள் ஐந்து பேர் விலகியுள்ளனர். இது, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பின், லக்னோவில் கபில் சிபல் கூறியதாவது:நான் சுயேச்சை வேட்பாளராக, வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். நாட்டின் சுதந்திரமான குரலாக இருக்கவே, நான் எப்போதும் விரும்புகிறேன்.

பார்லிமென்டில், தனித்து இயங்கும் சுதந்திரமான எம்.பி., அவசியம். அப்போது தான், இது எந்தவொரு கட்சியையும் சாராத குரல் என்ற நம்பிக்கை மக்களுக்கும் ஏற்படும். காங்கிரசிலிருந்து, கடந்த 16ம் தேதியே ராஜினாமா செய்துவிட்டேன். எனவே, நான் தீவிர காங்கிரஸ்காரன் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர் கூட்டம், கடந்த 13 - 15 வரை நடந்தது. அதற்கு மறுநாள் கபில் சிபல் ராஜினாமா செய்துள்ளார்.கட்சியை பலப்படுத்துவதற்காக நடந்த சிந்தனையாளர் கூட்டம் முடிந்த ஓரிரு நாட்களிலேயே, கட்சியை விட்டு சுனில் ஜாக்கர், ஹர்திக் படேல் மற்றும் கபில் சிபல் விலகியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.


- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (8+ 45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
26-மே-202217:50:59 IST Report Abuse
Somiah M அற்ற குளத்து அறுநீர் பறவை போல அதாவது நீர் இல்லாத குளத்தில் எந்த நீரில் வாழும் பறவையும் தாங்காது . அது போல காங்கிரசில் எந்த பெரிய தலைவரும் தங்க மாட்டார்கள் போலிருக்கிறதே .காங்கிரஸ் மாறவேண்டும் .மாறுமா ?......................................அல்லது மாறியே ...............................போய்விடுமா ?
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
26-மே-202215:12:36 IST Report Abuse
Vijay D Ratnam தமிழகத்தில் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை கழற்றி விடுவது திமுகவின் எதிர்காலத்துக்கு நல்லது. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போல இனி தேறாது. அது டேட் எக்ஸ்பைரி ஆகிவிட்டது. ஸ்டாலின் அவர்களே உங்கள் அல்லக்கை ஊடகங்கள் சொல்வதை உங்களை சுற்றி இருக்கும் ஜால்றா கூட்டத்தின் பேச்சை கேட்காதீர்கள். கிரவுண்ட் ரியாலிட்டியை புரிந்துகொள்ளுங்கள். தமிழ்நாட்டில் பாஜக பெரும் வளர்ச்சி அடைந்துக்கொண்டு இருக்கிறது. ஹிந்துக்கள் பெருமளவில் பாஜக பக்கம் திரும்புகிறார்கள். பாஜகவின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக் இருப்பது சாட்சாத் திடாவிட கும்பல்கள்தான். பெரியாரிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள், அர்பன் நக்சல்கள், ஹிந்து மதத்தை கேவலமாக சித்தரித்து வீடியோ போடும் யூ டியூபர் கள் தான். கொஞ்சம் கூட கஷ்டப்படாமல் தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி அதிமுக பாஜக கூட்டணியில் அமையும். இது உறுதி.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
26-மே-202215:02:34 IST Report Abuse
a natanasabapathy அரசியல்வாதிகளுக்கு கட்டையில் வேகும் வரை பதவி ஆசை போக மாட்டேன் என்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X