அமெரிக்காவில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் சுட்டுக் கொலை:18 வயது இளைஞரின் வெறிச்செயல்

Added : மே 26, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஹூஸ்டன்,-இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 212 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் மிகவும் மோசமான சம்பவம் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்துள்ளது. 18 வயது இளைஞர் வெறித்தனமாக சுட்டதில், 19 பள்ளி குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் அந்த இளைஞரை சுட்டுக் கொன்றனர்.அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருவது குறித்து தொடர்ந்து கவலை தெரிவிக்கப்பட்டு


அமெரிக்கா, 21 பேர், சுட்டுக் கொலை, இளைஞன், வெறிச் செயல்

ஹூஸ்டன்,-இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 212 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் மிகவும் மோசமான சம்பவம் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்துள்ளது. 18 வயது இளைஞர் வெறித்தனமாக சுட்டதில், 19 பள்ளி குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.

போலீசார் அந்த இளைஞரை சுட்டுக் கொன்றனர்.அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருவது குறித்து தொடர்ந்து கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும், 212 பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

விரக்தி

இந்நிலையில், டெக்சாஸ் மாகாணம் உவால்டே நகரில் உள்ள ராப் துவக்கப் பள்ளிக்குள் நேற்று முன்தினம் காலையில் நுழைந்த, 18 வயது இளைஞர், சரமாரியாக சுடத் துவங்கியுள்ளார். ஏ.ஆர்., - 15 ரக துப்பாக்கியுடன் அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். அந்த இளைஞரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் தொடர்ந்து குழந்தைகள் மீது சுட்டதால், போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவத்தில், 19 குழந்தைகள், ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர். இரண்டு போலீசார் படுகாயமடைந்துள்ளனர். இதைத் தவிர, பல குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் சால்வடார் ரமோஸ் என்பது தெரியவந்துள்ளது.

இந்தப் பள்ளியில் தாக்குதல் நடத்துவதற்கு முன், வீட்டில் இருந்த தன் பாட்டியையும் அவர் சுட்டுக் கொன்றுஉள்ளார்.எதற்காக அவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. அதே நேரத்தில், பள்ளியில் தொடர்ந்து மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததால், படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.மேலும், அவருடைய குடும்பத்திலும் சில பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தன் பாட்டியுடன் அவர் வசித்து வந்துள்ளார். இங்கும் அவர் மன அழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்து வந்துள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்தது துவக்கப் பள்ளி என்பதால், 5 - 11 வயது குழந்தைகளே அங்கு படித்து வந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கேள்விபட்டதும், அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அங்கு குவிந்தனர்.மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் பிறகே குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, உயிரிழந்த குழந்தைகளின் பெயர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.அதிபர் ஆவேசம்இந்த சம்பவம் குறித்து, ஆசிய நாடான ஜப்பானில் இருந்து விமானத்தில் நாடு திரும்பிக் கொண்டிருந்த அதிபர் ஜோ பைடனுக்கு தெரிவிக்கப்பட்டது.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக நான் குரல் கொடுத்து வருகிறேன். இந்த விஷயத்தில் ஏன் நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் திணறுகிறோம் என்று தெரியவில்லை.

தற்போது ஏற்பட்டுள்ள துயரமான சம்பவம், நாம் உடனடியாக செயலில் இறங்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது.சின்னக் குழந்தைகள் உயிரிழந்துள்ளது, இதயத்தை பிடுங்கி எறிவதுபோல் அமைந்துள்ளது. தன் நண்பர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்ற குழந்தைகளின் மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, துப்பாக்கி கட்டுப்பாடுகளை உடனடியாக தீவிரமாக்க வேண்டும்.உயிரிழந்த பள்ளி குழந்தைகள் நினைவாக நாடு முழுதும், வரும், 29ம் தேதி வரை தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
26-மே-202217:55:22 IST Report Abuse
Manguni ஆவேசம்.. ஹஹஹஹ்.. துப்பாக்கி கலாச்சாரம் ஆரம்பிச்சு வைச்சே நீங்கதான்.. பாவம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
Rate this:
Cancel
Sivak - Chennai,இந்தியா
26-மே-202216:19:34 IST Report Abuse
Sivak கடவுளின் படைப்பிலேயே ஒரு அற்புதம்.. கள்ளம் கபடம் இல்லாத அந்த குழந்தைகள் ... எப்படி கொல்ல மனம் வருகிறதோ ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X