மேற்கு வங்க அமைச்சரிடம் சி.பி.ஐ., மீண்டும் விசாரணை

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர் நியமனங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தொழில் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, நேற்று இரண்டாவது முறையாக சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜரானார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பார்த்தா சாட்டர்ஜி கல்வி அமைச்சராக இருந்த போது, அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த
மேற்கு வங்க அமைச்சர் , சி.பி.ஐ.,, மீண்டும் விசாரணை

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர் நியமனங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தொழில் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, நேற்று
இரண்டாவது முறையாக சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜரானார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பார்த்தா சாட்டர்ஜி கல்வி அமைச்சராக இருந்த போது, அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு
செய்துள்ளது. இவ்வழக்கில் கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த வாரம் பார்த்தா சாட்டர்ஜி, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் நேரில் ஆஜரானார்.


latest tamil news





இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது முறையாக அவர் விசாரணைக்கு வந்தார். இது குறித்து சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆசிரியர் நியமன முறைகேடுகள் தொடர்பாக மேற்கு வங்க பள்ளி ஆணையத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் சி.பி.ஐ.,யிடம் வாக்குமூலம்
அளித்துள்ளனர். இதற்கும் பார்த்தா சாட்டர்ஜி கடந்த வார விசாரணையில் தெரிவித்த தகவல்களும் ஒத்துப் போகவில்லை. அதனால் அவர் மீண்டும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார்.
மூன்று மணி நேரம் நடந்த விசாரணையில் தற்போதைய கல்வி அமைச்சர் பரேஷ் அதிகாரி, முறைகேடாக தன் மகளை ஆசிரியர் பணியில் நியமித்தது
குறித்தும் கேட்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagar - Dukhan ,கத்தார்
26-மே-202217:52:05 IST Report Abuse
Nagar "மேற்கு வங்கத்தின் சிதம்பரம்" தான் இந்த பார்த்த சட்டர்ஜீ. தேர்வில் தோற்ற (பெயிலான) வர்களை கூப்பிட்டு ஒவ்வோரிடமும் ரெண்டு லக்ஷம் வரை லஞ்சம் பெற்று நியமனக்கடிதங்கள் கொடுத்தவர்தான் இவர். இதில் மம்தாவுக்கு பங்கு உண்டு. அந்த லஞ்ச பணத்தை எங்கு முதலீடு செய்தார் என்பதை கண்டறிந்து அந்த சொத்துக்களை முடக்குவது அவசியம்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-மே-202206:01:39 IST Report Abuse
Kasimani Baskaran பொய் சொல்கிறவர்களை தூக்கி உள்ளே வைத்து நொங்குவதை விட்டுவிட்டு திரும்ப கேள்வி கேட்பதில் பயன் ஒன்றும் இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X