வெளியுறவுத்துறையின் அனுமதி பெறாமல் பிரிட்டனுக்கு பயணித்த காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாடு பயணிக்கும் எம்.பி.,க்கள், வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெறவேண்டும் என்பது நெறிமுறை. இந்த அனுமதி, பயணத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக பெறப்பட வேண்டும்.பல்வேறு நாட்டு அரசுகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளில் நம் எம்.பி.,க்களுக்கான அழைப்பு, வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாகவே அனுப்பப்படும். அப்படி இல்லாமல், எம்.பி.,க்கள் நேரடியாக அழைக்கப்படும் போது, மத்திய அரசிடம் இருந்து அரசியல் ரீதியான அனுமதி பெறுவது கட்டாயமாகிறது.
இந்நிலையில், காங்., - எம்.பி., ராகுல், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு சமீபத்தில் சென்றார். அங்கு, கேம்பிரிட்ஜ் பல்கலை., நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். இந்தப் பயணத்திற்கு, வெளியுறவுத்துறையின் அனுமதியை ராகுல் பெறவில்லை என, கூறப்படுகிறது.இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE