கொரோனா காலத்தில் பாலியல் தொந்தரவு அதிகம்: மூன்றாண்டுகளில் 552 போக்சோ வழக்குகள்

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மதுரை: மதுரையில் 2020 முதல் இன்றுவரை 552 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பலாத்காரம் செய்ததாக நகரில் 185 வழக்குகளும், புறநகரில் 210 வழக்குகளும் அடங்கும். கொரோனா காலத்தில் பாலியல்தொந்தரவு அதிகரித்து வழக்குள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.பாலியன் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைபாதுகாத்தல் (போக்சோ)சட்டத்தின் கீழ்வாரம் குறைந்தது இரு வழக்குகளாவது

மதுரை: மதுரையில் 2020 முதல் இன்றுவரை 552 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பலாத்காரம் செய்ததாக நகரில் 185 வழக்குகளும், புறநகரில் 210 வழக்குகளும் அடங்கும். கொரோனா காலத்தில் பாலியல்தொந்தரவு அதிகரித்து வழக்குள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.



latest tamil news




பாலியன் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைபாதுகாத்தல் (போக்சோ)சட்டத்தின் கீழ்வாரம் குறைந்தது இரு வழக்குகளாவது பதிவாகிறது. 2012-ல் அமலான இச்சட்டத்தி்ன் கீழ் 18 யதிற்குட்பட்டோர் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது சமந்தப்பட்டோரை கைதுசெய்கின்றனர்.

பெரும்பாலும் பள்ளி மாணவியரை காதலித்து உறவு வைத்தல், திருமண வயதை அடையாத சிறுமியை திருமணம் செய்தல் போன்றவற்றில் தான் அதிக வழக்குகள் போக்சோவில் பதிவாகின்றன. அடுத்து சிறுமிகளிடம்சில்மிஷத்தில் ஈடுபடுவது, போதையில் தவறாக நடப்பது னெ வழக்குகள் பதிவாகின்றன.


latest tamil news




மதுரைபுறநகரில் 2020 முதல் 2022 மே 23வரை பலாத்காரம், செய்ததாக 210 வழக்குகளும், நகரி்ல 185 வழக்குகளும் பதிவாகியுள்ளன. சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புறநகரில் 97 வழக்குகளும் நகரில் 59 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
போலீசார் கூறியது, பாலியல்தொந்தரவுகளுக்கு ஆளாகும் சிறுமிகள்,குழந்தைகள் உடனடியாக 24 மணிநேரமும் செயல்படும் ஹெ ல்ப் லைன் (1098) எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் 2020-21-ம் ஆண்டில்கொரோனா கால கட்டத்தில் அதிக புகார்கள் வந்தன என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
26-மே-202211:02:11 IST Report Abuse
RaajaRaja Cholan இந்த கருமம், பல தலைமுறைகளாக சிறுவர்கள் மீது ஏவ படுகிறது ஆன் சிறுவர்களும் விலக்கல்ல, தற்பொழுது மக்கள் இது தங்கள் மீது உண்டான அசிங்கம் இல்லை, செய்தவன் தவறு என்று உணர்வதால் வெளியே சட்டம் வழியாக தண்டனை பெற்று தருகிறார்கள், ஆனா ஆண் சிறுவர்களின் மீதான தாக்குதலும் அதிகம் வெளியே என்னும் வர வேண்டும்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
26-மே-202210:24:01 IST Report Abuse
raja அதுல பார்த்தீங்கன்னா இந்த கேடுகெட்ட விடியாத ஆட்சி வந்த பிறகு உடன்பிறப்புகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான் போங்க..
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
26-மே-202210:21:04 IST Report Abuse
Sampath Kumar காமத்துக்கு சூத்ரம் ஏழுதி பெயர் வாங்கின சமூகம் நம்ம நாடு அதை தான் மெய்பிக்கின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X