கோவை: கோவையில் இசைஞானி இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அதே மேடையில் பரிசுகளைப் பெறவும், 'தினமலர்' வாசகர்களுக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
கொங்கு மண்டலத்திலுள்ள பல லட்சம் இசை ரசிகர்களை கொண்டாட்டத்தில் மூழ்கடிக்க, இசைஞானி இளையராஜா நேரடியாக பங்கேற்கும் இசை நிகழ்ச்சி, கோவையில் ஜூன் 2ம் தேதி வெகு பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் நடக்கவுள்ள இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில், இசைஞானியுடன் பிரபல பாடகர்கள், இசைக்கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

நிகழ்ச்சியில், ஊடக பங்குதாரராக, 'தினமலர்' நாளிதழ் கரம் கோர்த்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நமது வாசகர்களுக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக ஒரு போட்டி நடத்தப்படவுள்ளது. இசைஞானி இசையமைத்த படங்கள் மற்றும் ஆல்பம் தொடர்பாக, கேட்கப்படும் கேள்விக்கு சரியான விடையை உங்களின் தொடர்பு எண்ணுடன் cbeevents@dinamalar.in என்ற இ.மெயில் முகவரிக்கு வரும் மே 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
சரியான விடை, சிறந்த வாசகம் அனுப்பும் வாசகர்களில், 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு இசை நிகழ்ச்சியில் பங்கேற்க டிக்கெட் தரப்படுவதுடன், மேடையில் வைத்து பரிசுகளும் வழங்கப்படும். வாய்ப்பை நழுவ விடாமல் போட்டியில் பங்கேற்று, விரைவாக உங்களின் பதில்களை அனுப்பவும். போட்டியில் வெல்லும் நபர்கள் குறித்த விபரங்கள், ஜூன் முதல் தேதி 'தினமலர்' நாளிதழில் வெளியாகும்.
சிறந்த வாசகம்
இசைஞானியை போற்றும் விதமாக, 10 வார்த்தைகளுக்குள் அருமையான வாசகம் ஒன்றையும் தவறாமல் எழுதி அனுப் புங்கள். சரியான பதிலுடன் சிறந்த வாசகம் அனுப் பும் வாசகர்களுக்கு காத்திருக்கிறது பரிசு!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE