சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

துதிக்கையும் துக்கமும்

Added : மே 26, 2022 | |
Advertisement
யானைகள் மரணத்தை எப்படி எடுத்துக்கொள்கின்றன? இதைப் பற்றி செய்திகள், வனப் பகுதிக் கதைகள் நிறைய உலவினாலும், உயிரியலாளர்கள் எதிர்பார்க்கும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை.அண்மையில், இந்திய வனப்பகுதிகளில் எடுக்கப்பட்ட யானைகளின் யுடியூப் வீடியோக்களில், அருமையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தங்கள் கூட்டத்தை சேர்ந்த யானைகள் இறந்தால், அதைச் சுற்றி பிற யானைகள் வலம் வருகின்றன.

யானைகள் மரணத்தை எப்படி எடுத்துக்கொள்கின்றன? இதைப் பற்றி செய்திகள், வனப் பகுதிக் கதைகள் நிறைய உலவினாலும், உயிரியலாளர்கள் எதிர்பார்க்கும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை.

அண்மையில், இந்திய வனப்பகுதிகளில் எடுக்கப்பட்ட யானைகளின் யுடியூப் வீடியோக்களில், அருமையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தங்கள் கூட்டத்தை சேர்ந்த யானைகள் இறந்தால், அதைச் சுற்றி பிற யானைகள் வலம் வருகின்றன. வெகு நேரம் அமைதியாக நின்று, இறந்த யானையை பார்த்தபடியே இருக்கின்றன.

சில சமயம், துதிக்கையால் இறந்த யானையை தொட்டுத் தொட்டுப் பார்க்கின்றன. சில யானைகள் காலால் உதைக்கின்றன. சடலத்தின் அருகேயே துாங்குகின்றன. மனிதர்கள் கிட்டே வந்தால் விரட்டுகின்றன.

யானைகள் தங்கள் குட்டிகளை தூக்குவதில்லை. ஆனால், குட்டி யானைகள் இறந்தால், அதை தாய் யானைகள் துதிக்கையால் துாக்கியபடி நடக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும், 'ராயல் சொசைட்டி ஓப்பன் சயன்ஸ்' இதழில் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வு முழுவதும், யுடியூப் காணொலி 'கிளிப்பிங்'குகளை வைத்து மட்டுமே நடத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X