சோயா சக்கரம்!
புதிய வகை சக்கரத்தை குட் இயர் உருவாக்கியிருக்கிறது. 2040க்குள் பெட்ரோலிய எண்ணெய்களை, டயர் தயாரிப்பிலிருந்து நீக்க, குட் இயர் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, அதன் ஆராய்ச்சியாளர்கள், சோயா எண்ணெய் கலந்த ரப்பர் கலவை ஒன்றை உருவாக்கியுள்ளனர். சோயா- ரப்பர் கலவையை, அதிவேக வர்த்தக வாகன டயர்களுக்கு குட் இயர் பயன்படுத்தும். டயர்களுக்கு சோயா பயன்படுவது ஆச்சரியம்தான். அதைவிட ஆச்சரியம், குட் இயர், பெட்ரோலிய பொருட்களிலிருந்து விலகுவது.
வைட்டமின் பழம்
பொது முடக்கத்திற்குப் பிறகு, உலகெங்கும் 100 கோடி வைட்டமின்-டி பற்றாக்குறை இருப்பதாக அறிக்கைகள் சொல்கின்றன.
டி வைட்டமினை உணவு மூலம் பெறுவது கடினம். ஏனெனில், புற ஊதா கதிர்கள் படும்போது, நம் தோலிலேயே வைட்டமின் டி உற்பத்தியாகிறது.
எனவே, தினசரி உணவில் இடம்பெறும் தக்காளியில், மரபணு திருத்தம் மூலம் வைட்டமின்- டியை சேர்க்க இங்கிலாந்திலுள்ள ஜான் இன்ஸ் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
கரையும் ஓய்வு!
இடையூறு இல்லாத, தரமான துாக்கத்திற்கும், பருவநிலை மாற்றத்திற்கும் இருக்கும் தொடர்பு பற்றி மருத்துவர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர். சுற்றியுள்ள வெப்பநிலை உயர்வதால், நமது ஓய்வு பாதிக்கப்படுகிறது என்ற கருத்து தற்போது வலுவடைந்து வருகிறது.
அண்மையில் கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், துாக்கம் குறித்து 68 நாடுகளில் 47 ஆயிரம் பேரிடையே நடத்திய ஆய்வுகள், சராசரிக்கும் அதிகமான வெப்பநிலை இருப்பது, மனித துாக்கத்தின் தரத்தை பாதிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE