எஸ்.பி.பி., வனத்தில் கல்வெட்டு திறப்பு

Added : மே 26, 2022 | |
Advertisement
கோவை: கோவையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு வனத்தில், புதிய கல்வெட்டை அவரது மகன் சரண் திறந்து வைத்தார். கோவை 'சிறுதுளி' அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி சார்பில், மறைந்த பாடகர் எஸ்.பி., பாலசுப்ரமணியம் நினைவாக, 2020ம் ஆண்டு, பச்சாபாளையம், ஆபீசர்ஸ் காலனியில், எஸ்.பி.பி., வனம் உருவாக்கப்பட்டது.எஸ்.பி.பி., வனத்தில், புதிய கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
எஸ்.பி.பி., வனத்தில் கல்வெட்டு திறப்பு

கோவை: கோவையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு வனத்தில், புதிய கல்வெட்டை அவரது மகன் சரண் திறந்து வைத்தார்.

கோவை 'சிறுதுளி' அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி சார்பில், மறைந்த பாடகர் எஸ்.பி., பாலசுப்ரமணியம் நினைவாக, 2020ம் ஆண்டு, பச்சாபாளையம், ஆபீசர்ஸ் காலனியில், எஸ்.பி.பி., வனம் உருவாக்கப்பட்டது.எஸ்.பி.பி., வனத்தில், புதிய கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண் மற்றும் எஸ்.பி.சைலஜா கலந்து கொண்டு, புதிய கல்வெட்டை திறந்து வைத்து, கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சரண் பேசுகையில், ''இசை வடிவிலான வனத்தை உருவாக்கி, என் தந்தையின் பெயர் வைத்து, கவுரவித்த அனைவருக்கும் நன்றி. இந்த வனத்தை துவக்கி வைத்த நடிகர் விவேக்கின் மரணம் வருத்தம் அளித்தாலும், தற்போது அவரும் என் தந்தையும் ஒன்றாக இருந்து நம்மை ஆசீர்வதிப்பர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X