கமல் கட்சியில் விலகல்; பா.ஜ.,வில் இன்று ஐக்கியம்

Added : மே 26, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலர் சரத்பாபு, அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இன்று, அவர் பா.ஜ.,வில் இணைகிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சட்டசபை தேர்தலுக்கு பின், கட்சியில் கமலின் ஈடுபாடு குறைந்து விட்டது. அவர் வருவாய் ஈட்டும் மன நிலைக்கு மாறி விட்டார். இதனால், கட்சியால் எந்த மாற்றத்தையும் மக்களுக்காக தர முடியாது. அதனால் விலகுகிறேன்' என
கமல் கட்சியில் விலகல்; பா.ஜ.,வில் இன்று ஐக்கியம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலர் சரத்பாபு, அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இன்று, அவர் பா.ஜ.,வில் இணைகிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சட்டசபை தேர்தலுக்கு பின், கட்சியில் கமலின் ஈடுபாடு குறைந்து விட்டது. அவர் வருவாய் ஈட்டும் மன நிலைக்கு மாறி விட்டார். இதனால், கட்சியால் எந்த மாற்றத்தையும் மக்களுக்காக தர முடியாது. அதனால் விலகுகிறேன்' என கூறியுள்ளார்.

பின், நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: கட்சி மற்றும் தலைவரின் நடவடிக்கை, சில மாதங்களாக சொல்லும்படி இல்லை. இரண்டு உள்ளாட்சி தேர்தலின் போதும், நான் தான் பொறுப்பாளராக இருந்தேன். அப்போது கமலின் ஈடுபாடு, அதிகபட்சம் ஒரு மணி நேரம் என்றளவிலேயே இருந்தது. இதனால், கட்சி நிச்சயம்வளராது.சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்தவர்கள், கட்சிக்குள் வந்த பின்னால் தான், கமலுக்காக பணியாற்றியவர்கள் மீது வன்மம் உருவானது.

அவர்கள் மீது தேவையில்லாத புகார்களும் சுமத்தப்பட்டன.சிவ இளங்கோ, செந்தில் ஆறுமுகம், கட்சியில் இருந்து சென்றால் தான், கட்சி உருப்படும். என் மக்கள் பணி எப்போதும் தொடரும். அதற்காக இன்று, பா.ஜ.,வில் இணைய உள்ளேன்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TRUBOAT - Chennai,இந்தியா
29-மே-202213:06:23 IST Report Abuse
TRUBOAT மிச்ச சொச்சம் சொச்ச மிச்சம்... எல்லாருக்கும் இங்கே இடம் உண்டு. கட்சியை பலப்படுத்தும் வேகத்தைப்பார்த்த, 2155 வருஷத்துக்குள்ள ஆட்சியை பிடிச்சுடுவாங்க போல இருக்கே.....
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
29-மே-202212:33:02 IST Report Abuse
Sridhar சின்னபையன் மிரட்டுற அளவுக்கு தரம் தாழ்ந்து போய்விட்டார் நாயகன். இன்னுமும் கட்சி இருக்கிறது என்பது மிக ஆச்சரியம். ஒருவேளை இத்தாலியிலிருந்து பணம் வருகிறதோ?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-மே-202216:20:29 IST Report Abuse
J.V. Iyer மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்னும் மக்கள் இருக்கிறார்களா? கமல் சாரே திமுகவில் சேர்ந்துவிட்டாரே? கட்சியை கலைக்கவேண்டாமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X