ஆய்வு குழு மாணவர் தர்ணா| Dinamalar

ஆய்வு குழு மாணவர் தர்ணா

Added : மே 26, 2022 | |
தமிழக அரசின் உதவி பெறும் இருபாலர் கல்லுாரியாக செயல்படும், சேலம், கொண்டலாம்பட்டி பைபாஸில் உள்ள, சவுடேஸ்வரி, அடுத்த கல்வியாண்டு முதல், மகளிர் கல்லுாரியாக மாற்ற அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் ஆணை வழங்க, பேராசிரியர்கள் முத்துசாமி, பெரியசாமி உள்ளடங்கிய குழுவினர், நேற்று கல்லுாரியில் ஆய்வு நடத்தினர்.மதியம், 12:00 மணிக்கு குழுவினர் வந்த நிலையில், அவர்கள் காரை


தமிழக அரசின் உதவி பெறும் இருபாலர் கல்லுாரியாக செயல்படும், சேலம், கொண்டலாம்பட்டி பைபாஸில் உள்ள, சவுடேஸ்வரி, அடுத்த கல்வியாண்டு முதல், மகளிர் கல்லுாரியாக மாற்ற அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் ஆணை வழங்க, பேராசிரியர்கள் முத்துசாமி, பெரியசாமி உள்ளடங்கிய குழுவினர், நேற்று கல்லுாரியில் ஆய்வு நடத்தினர்.
மதியம், 12:00 மணிக்கு குழுவினர் வந்த நிலையில், அவர்கள் காரை முற்றுகையிட்டு, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தர்ணாவில் ஈடுபட்டனர். மகளிர் கல்லுாரியாக மாற்ற ஒப்புதல் வழங்கக்கூடாது என கோஷம் எழுப்பினர். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் போராட்டம் நீடித்தது. ஆய்வு குழுவினர் பேச்சு நடத்தினர். அப்போது, கோரிக்கையை துணைவேந்தரிடம் தெரிவிப்பதாக உறுதியளித்தனர். இதனால், மாணவர்கள் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X