மகுடஞ்சாவடி, அ.புதுார் ஊராட்சியில், ஏராளமான பெண்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், ஏரி வேலை செய்கின்றனர். அவர்களுக்கு, வேலை அட்டையை, ஊராட்சி நிர்வாகம் நடப்பாண்டு புதுப்பிக்க, ஒவ்வொருவரும், தலா, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், நேற்று மதியம், 12:00 மணிக்கு, பல பெண்கள், அ.புதுார் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மகுடஞ்சாவடி போலீசார், பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் பேச்சு நடத்தி, கலைந்து போகச்செய்தனர்.
அ.புதுார் ஊராட்சி தலைவர் ஐயமுத்து கூறுகையில், ''பாரத பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்க, கலெக்டர் உத்தரவுப்படி, 1,000 ரூபாய் கேட்டோம். மற்றபடி ஏரி வேலை அட்டைக்கு பணம் வசூலிக்கவில்லை. பணம் கொடுத்தால்தான் அட்டை வழங்குவோம் என்றும் கூறவில்லை. இதுகுறித்து, கலெக்டரிடம் கடிதம் வழங்க உள்ளோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE