அ.பட்டணம் தலைவர் பதவி தி.மு.க., வசமானது

Added : மே 26, 2022 | |
Advertisement
சேலம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய குழு அலுவலகத்தில், கடந்த பிப்., 28ல், நம்பிக்கையில்லா தீர்மான சிறப்பு கூட்டம் நடந்தது. அதில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய குழு தலைவராக இருந்த பார்வதி பதவியை இழந்தார். இதையடுத்து, ஒன்றிய குழு துணைத்தலைவராக இருந்த, தி.மு.க.,வை சேர்ந்த புவனேஸ்வரி, ஒன்றிய குழு தலைவர் பொறுப்பை வகித்து வந்தார்.இந்நிலையில், நேற்று தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது.


சேலம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய குழு அலுவலகத்தில், கடந்த பிப்., 28ல், நம்பிக்கையில்லா தீர்மான சிறப்பு கூட்டம் நடந்தது. அதில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய குழு தலைவராக இருந்த பார்வதி பதவியை இழந்தார். இதையடுத்து, ஒன்றிய குழு துணைத்தலைவராக இருந்த, தி.மு.க.,வை சேர்ந்த புவனேஸ்வரி, ஒன்றிய குழு தலைவர் பொறுப்பை வகித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில், தி.மு.க.,வின், 4வது வார்டு உறுப்பினர் ஹேமலதா, போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.
அதேபோல், பனமரத்துப்பட்டி, அமானிகொண்டலாம்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல், ஒன்றிய கமிஷனர் சீனிவாசன் முன்னிலையில், நேற்று நடந்தது. 8வது வார்டு உறுப்பினர் சரவணன், 1வது வார்டு உறுப்பினர் உதயா போட்டியிட்டனர். தலைவர், 15 வார்டு உறுப்பினர் ஓட்டுப்போட்டனர். எண்ணிக்கையில், சரவணன், 11 ஓட்டுகள் பெற்று, துணைத்தலைவராக வெற்றி பெற்றார். உதயா, 5 ஓட்டுகள் மட்டும் பெற்றார். இருவரும் தி.மு.க.,வை சேர்ந்தவர்களாவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X