ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை; துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

Added : மே 26, 2022 | |
Advertisement
ஒரு கவுன்சிலர்கள் கூட வராததால் ஒன்றிய குழு துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், தி.மு.க., - 5, அ.தி.மு.க., - 6, பா.ம.க., கம்யூ., தலா ஒன்று என, 13 கவுன்சிலர்கள் உள்ளனர். துணைத்தலைவர் பதவிக்கு, நேற்று மதியம், 2:30 மணிக்கு தேர்தல் நடக்கவிருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரான, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ராமஜெயம்(தணிக்கை), ஒன்றிய அலுவலகத்தில்


ஒரு கவுன்சிலர்கள் கூட வராததால் ஒன்றிய குழு துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், தி.மு.க., - 5, அ.தி.மு.க., - 6, பா.ம.க., கம்யூ., தலா ஒன்று என, 13 கவுன்சிலர்கள் உள்ளனர். துணைத்தலைவர் பதவிக்கு, நேற்று மதியம், 2:30 மணிக்கு தேர்தல் நடக்கவிருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரான, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ராமஜெயம்(தணிக்கை), ஒன்றிய அலுவலகத்தில் காத்திருந்தார். ஆனால், ஒரு கவுன்சிலர்கள் கூட வரவில்லை. இதனால், துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக, ராமஜெயம், 'நோட்டீஸ்' ஒட்டினார்.
இதுகுறித்து, கவுன்சிலர்கள் கூறுகையில், 'தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த முடிவு தெரியவில்லை. தலைவர் யார் என்பதே குழப்பமாக உள்ளது. அதனால், துணைத்தலைவர் தேர்தலில் பங்கேற்கவில்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X