'ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம்'

Added : மே 26, 2022 | |
Advertisement
''ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் அறிமுகம் செய்யப்படும்,'' என, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.சேலம் மாவட்டம், ஏற்காட்டில், 45-வது கோடை விழா, மலர் காட்சி நேற்று தொடங்கியது. அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேசுகையில், ''ஏற்காட்டில் உள்ள அனைத்து கிராம பகுதிகளும் இல்லந்தோறும் பயன்பெறும்படி

''ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் அறிமுகம் செய்யப்படும்,'' என, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில், 45-வது கோடை விழா, மலர் காட்சி நேற்று தொடங்கியது. அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேசுகையில், ''ஏற்காட்டில் உள்ள அனைத்து கிராம பகுதிகளும் இல்லந்தோறும் பயன்பெறும்படி பாதுகாக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டம், ஓராண்டுக்குள் தொடங்கப்படும். கோடை விழாவுக்கு சுற்றுலா பயணியர், மக்கள், குழந்தைகள் வந்து சிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.
வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''தோட்டக்கலை -மலைப்பயிர்கள் துறை சார்பில், அண்ணா பூங்காவில் லட்சக்கணக்கான மலர்களால் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்காட்டில் இருந்து சேலத்துக்கு விரைவில் டவுன் பஸ் வசதிகள்
செய்துதரப்படும்,'' என்றார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் சுற்றுலா தலங்கள் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி, 10 முதல், 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அடிப்படை, பொழுதுபோக்கு வசதிகள் செய்து தரப்படும். ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் அறிமுகம் செய்யப்படும். மேலும், இங்கு, 5 முதல், 10 ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் சாகச சுற்றுலா அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் தளத்தில், டென்ட் அமைத்தல், விளையாட்டு உள்ளிட்டவை இடம்பெற உள்ளன.
ஏற்காட்டில், இந்தாண்டு நடமாடும் கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்படும். இதற்கான வழிமுறை, நெறிமுறை இம்மாதம் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 1,157 பயனாளிகளுக்கு, 3.45 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, சில்லரை கடை உரிமையாளர்களுக்கு மஞ்சப்பைகளை, அமைச்சர்கள் வழங்கினர்.
முன்னதாக, 'ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு அரங்குகளை, அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X