பைக்குகள் மோதல்: பாட்டி, பேரன் பலி| Dinamalar

பைக்குகள் மோதல்: பாட்டி, பேரன் பலி

Added : மே 26, 2022 | |
அரூர் அருகே, இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பாட்டி, பேரன் பலியாயினர்.தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த கேத்துரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 45, விவசாயி; இவரது மகன் சந்தோஷ், 25; இவர், செல்லம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு, நேற்று மதியம், 3:00 மணிக்கு, ஹீரோ ஸ்பிளண்டர் புரோ பைக்கில் கேத்துரெட்டிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.


அரூர் அருகே, இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பாட்டி, பேரன் பலியாயினர்.
தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த கேத்துரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 45, விவசாயி; இவரது மகன் சந்தோஷ், 25; இவர், செல்லம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு, நேற்று மதியம், 3:00 மணிக்கு, ஹீரோ ஸ்பிளண்டர் புரோ பைக்கில் கேத்துரெட்டிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். பைக்கின் பின் சீட்டில் அவரது தாய் குமார்த்தி, 41, பாட்டி சின்னபாப்பா, 55, ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அரூர் - பெத்துார் சாலையில், அன்னலாம்பட்டி பிரிவு ரோடு அருகில் வந்தபோது, பெத்துாரை சேர்ந்த விஜய், 24, என்பவர் ஓட்டி வந்த ஹீரோ ஹோண்டா பேஷன் புரோ பைக், சந்தோஷ் ஓட்டி வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சந்தோஷ், சின்னபாப்பா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குமார்த்தி காயமின்றி தப்பினார். விபத்தில் படுகாயமடைந்த விஜய் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகார்படி, அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X