பிளாஸ்டிக் குப்பை கழிவால் மாசடையும் பிடமனேரி ஏரி

Added : மே 26, 2022 | |
Advertisement
தர்மபுரி, இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிடமனேரி ஏரியில், தேங்கும் பிளாஸ்டிக் கழிவால் ஏரி மாசடைந்து வருகிறது. மேலும் இதில், மழை காலங்களில் வழிந்தோடும் மழைநீர் இந்த ஏரியில் நிரம்பும். பிடமனேரி பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் இந்த ஏரியில் கலக்கிறது. இதனால், ஏரியின் துாய்மை நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது.கடந்த ஓராண்டுக்கு முன், இந்த


தர்மபுரி, இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிடமனேரி ஏரியில், தேங்கும் பிளாஸ்டிக் கழிவால் ஏரி மாசடைந்து வருகிறது. மேலும் இதில், மழை காலங்களில் வழிந்தோடும் மழைநீர் இந்த ஏரியில் நிரம்பும். பிடமனேரி பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் இந்த ஏரியில் கலக்கிறது. இதனால், ஏரியின் துாய்மை நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது.
கடந்த ஓராண்டுக்கு முன், இந்த ஏரியில் மீன் வளர்க்க பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தற்போது மீன்கள் வளர்ந்து வரும் நிலையில், இதில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால், மீன்கள் இறக்கும் நிலையுள்ளது. இதுகுறித்து, இலக்கியம்பட்டி பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஏரியை துாய்மை படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X