34 ஏக்கர் கோவில் நிலத்துக்கு ரூ.8.29 லட்சம் குத்தகை வசூல்

Added : மே 26, 2022 | |
Advertisement
ஓசூர் அடுத்த நாகொண்டப்பள்ளி பஞ்., இடையநல்லுாரில், வேணுகோபால சுவாமி, கரகதாம்மா, ஆஞ்சநேயர், பசுவேஸ்வரா ஆகிய நான்கு கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், வேணுகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான தனித்தனி சர்வே நம்பரில் உள்ள, 34 ஏக்கர் நிலத்தை எட்டு பேர் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தனர். அந்த நிலத்தை பொது ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை


ஓசூர் அடுத்த நாகொண்டப்பள்ளி பஞ்., இடையநல்லுாரில், வேணுகோபால சுவாமி, கரகதாம்மா, ஆஞ்சநேயர், பசுவேஸ்வரா ஆகிய நான்கு கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், வேணுகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான தனித்தனி சர்வே நம்பரில் உள்ள, 34 ஏக்கர் நிலத்தை எட்டு பேர் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தனர். அந்த நிலத்தை பொது ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தவர்கள், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் தங்களுக்கு மீண்டும் குத்தகைக்கு நிலத்தை வழங்க வேண்டும் என கேட்டு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு தள்ளுபடியானதால், ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம், நேற்று காலை வேணுகோபால சுவாமி கோவில் நிலம், பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது.
இதில், 1,000 ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்தி, 70க்கும் மேற்பட்டோர் ஏலத்தில் பங்கேற்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, பூவரசன் முன்னிலையில் ஏலம் நடந்தது. மொத்தம், 8.29 லட்சம் ரூபாய்க்கு, எட்டு பேர் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தனர். வரும் ஜூலை, 1 முதல், அடுத்தாண்டு ஜூன், 30 வரை, இவர்களுக்கு குத்தகைக்கு நிலம் விடப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X