ஐஏஎஸ் அதிகாரியின் அராஜகம்: வாக்கிங் செல்ல ஸ்டேடியத்தை மூடும் அநியாயம்

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் ஸ்டேடியத்தை ஐஏஎஸ் அதிகாரி தனது நாயுடன் வாக்கிங் செல்வதற்காக வீரர்களை வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.டில்லியில் இருக்கும் பிரபல மைதானங்களில் ஒன்று தியாகராஜ் ஸ்டேடியம். இங்கு தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் பல விளையாட்டு வீரர்கள் வந்து தினமும் பயிற்சி
Stadium Emptied, Athletes, IAS officer, Walk, Dog, டில்லி, ஸ்டேடியம், விளையாட்டு வீரர்கள், ஐஏஎஸ் அதிகாரி, வாக்கிங், நடைபயிற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் ஸ்டேடியத்தை ஐஏஎஸ் அதிகாரி தனது நாயுடன் வாக்கிங் செல்வதற்காக வீரர்களை வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டில்லியில் இருக்கும் பிரபல மைதானங்களில் ஒன்று தியாகராஜ் ஸ்டேடியம். இங்கு தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் பல விளையாட்டு வீரர்கள் வந்து தினமும் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். சர்வதேச தரத்தில் ஓடுதளம் அமைக்கப்பட்டிருப்பதால் இங்கு பயிற்சி மேற்கொள்பவர்கள் காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளில் கூட சிறந்து விளங்குகின்றனர். மேலும் மின்னொளி வசதியும் இருப்பதால் இரவு வரை வீரர்களுக்கு பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இங்கு வீரர்கள் மாலை 7 மணிக்கு பின் விளையாட அனுமதிக்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. 7 மணிக்கு பிறகு பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களை மைதான அதிகாரிகள் வெளியேற வலியுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இரவு 8.30 மணி வரையும் மைதானத்தில் மின் விளக்குகள் ஒளிர்வதால் ஏன் வீரர்களை விரைந்து வெளியேற்ற வற்புறுத்துகிறார்கள் என்பதற்கான காரணம் புரியாமல் பயிற்சியாளர்களும், வீரர்களும் குழம்பியிருந்தனர்.


latest tamil news


இந்த நிலையில் டில்லியை சேர்ந்த வருவாய் முதன்மை செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் வாக்கிங் செல்வதற்காக இந்த ஸ்டேடியம் மூடப்பட்டது தெரியவந்தது. வீரர்களை வெளியேற்றிய அடுத்த அரைமணி நேரத்தில் காரில் வரும் கிர்வார், தனது நாயை வாக்கிங் செல்வதற்காக அழைத்து வருகிறார். வாக்கிங் செல்வதற்காக மொத்த ஸ்டேடியத்தையும் கடந்த சில தினங்களாக காலி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. வீரர்கள் இடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


பல கனவுகளுடனும், தேசத்திற்காக சாதித்திட வேண்டும் என்ற உத்வேகத்திலும் பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்களை வாக்கிங் செல்வதற்காக ஒரு ஐஏஎஸ் அதிகாரி வெளியேற்றிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சஞ்சீவ் கிர்வாரிடம் தொடர்பு கொண்டபோது, சில நேரங்களில் மட்டுமே தனது நாயை வாக்கிங் அழைத்து செல்வதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதேநேரத்தில் தான் வாக்கிங் செல்வதால் விளையாட்டு வீரர்களின் நடைமுறையை சீர்குலைப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-202209:12:02 IST Report Abuse
gopalakrishna kadni இவர்கள் இருவரையும் மாற்றியாகிவிட்டது. கணவர் லடாக் மற்றும் மனைவி அருணாசலப் பிரதேசம்
Rate this:
Cancel
விடியல் கனவுகள் - Komh,வங்கதேசம்
27-மே-202202:48:49 IST Report Abuse
விடியல் கனவுகள் நம்ம திராவிட மாடல் பரவிவருது
Rate this:
Cancel
kumaresan - Petaling Jaya,மலேஷியா
26-மே-202219:43:08 IST Report Abuse
kumaresan கோவிட் காலத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை அமலில் இருந்த போது, ஸ்டாலின் மகள் மட்டும் தனியாக கிரிவலம் சென்றதாக பத்திரிக்கைகளில் படித்ததாக ஞாபகத்தில் உள்ளது. இது கூட அந்த ஐஏஸ் அதிகாரி செய்தது போல்தான் உள்ளது.இந்தியாவில் அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்வது சகஜமாக போய்விட்டது போலும். என்றைக்குதான் நம் மக்கள் தம் தாவற்றை உணர்வார்களோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X