வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் ‛விக்ரம்' படத்தின் பாடலில் இடம் பெற்றுள்ள ‛ஒன்றியம்' என்னும் வார்த்தைக்கு கமல் அளித்துள்ள விளக்கம் இணையத்தில் ஹாட் டாபிக்காக உலா வருகிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மத்திய அரசை, ‛ஒன்றிய அரசு' என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இந்தியா என்பது பல மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம் என திமுக தரப்பினர் விளக்கமும் அளித்தனர். இது ஒருபுறம் இருக்க, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தான் தயாரித்து நடித்துள்ள ‛விக்ரம்' படத்தில் ‛பத்தலே' என்னும் பாடலை எழுதி நடித்துள்ளார். அப்பாடலில், ‛கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது.. ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே.. சாவி இப்ப திருடன் கையில..' என்னும் வரிகளும் இடம்பெற்றிருந்தது.

இந்த வரிகள் மத்திய அரசை குறிப்பிடுவதாக சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் சென்னையில் இப்படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கமலிடம் ஒன்றியம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்: தமிழில் 'ஒன்றியம்' என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன; வெவ்வேறாக புரிந்து கொண்டால் அது என் தவறில்லை. பத்திரிகையாளர்கள் அனைவரும் சேர்ந்ததும் ஒன்றியம் தான். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் ஒரு யூனியன் வைத்து நடத்தினால் அதுவும் ஒன்றியம் தான். இவ்வாறு அவர் விளக்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE