ஆற்றில் சாக்கடை கலப்பு: தலைகீழாக நின்று போராட்டம் நடத்திய இளைஞர்

Added : மே 26, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை: வீரசோழன் ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதை கண்டித்து, ஒரு இளைஞர் தலைகீழாக நின்று போராட்டம் நடத்தியுள்ளார்.காவிரியாற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வீரசோழன் ஆறு மயிலாடுதுறை மாவட்டத்தின் வழியே கடலில் கலக்கிறது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி மற்றும் வடிகால் வசதி அளிக்கும் முக்கிய ஆறான வீரசோழன் ஆற்றில் சங்கரன்பந்தல் என்ற இடத்தில் சுற்றியுள்ள
ஆற்றில் சாக்கடை கலப்பு: தலைகீழாக நின்று போராட்டம் நடத்திய இளைஞர்

மயிலாடுதுறை: வீரசோழன் ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதை கண்டித்து, ஒரு இளைஞர் தலைகீழாக நின்று போராட்டம் நடத்தியுள்ளார்.

காவிரியாற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வீரசோழன் ஆறு மயிலாடுதுறை மாவட்டத்தின் வழியே கடலில் கலக்கிறது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி மற்றும் வடிகால் வசதி அளிக்கும் முக்கிய ஆறான வீரசோழன் ஆற்றில் சங்கரன்பந்தல் என்ற இடத்தில் சுற்றியுள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் முழுவதுமாக திறந்துவிடப்படுகிறது. இதனால் வற்றாத ஜீவநதி போல் சாக்கடை நிரம்பி ஆறு போல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி பலவித நோய்கள் ஏற்படுகின்றது. நிலத்தடி நீரும் மெல்லமெல்ல சாக்கடை நீராக மாறி வருகிறது.

தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் வீரசோழன் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடனடியாக குடியிருப்புகளின் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும், கழிவுநீரை கலப்பவர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி வடக்குத் தெருவைச் சேர்ந்த கதிரவன் என்ற இளைஞர் சாக்கடை நீருக்கு அருகில் தலைகீழாக சிரசாசனம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X