காட்டு யானை தாக்கி ஒருவர் பலி: மக்கள் போராட்டம்

Added : மே 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன், 43. இவர், இன்று காலை 6:00 மணிக்கு ஆருட்டுபாறையில் உள்ள, தன் டீ கடையை திறக்க சாலை வழியாக நடந்து வந்தார். அப்போது, எதிரே வந்த காட்டு யானையை பார்த்து, காபி தோட்டத்துக்குள் ஓடி தப்பிக்க முயன்றார். ஆனால், யானை அவரை துரத்தி சென்று தாக்கியது. இதில், படுகாயம் அடைந்த அவர், உயிரிந்தார். தகவல், அறிந்து வந்து
காட்டு யானை தாக்கி ஒருவர் பலி: மக்கள் போராட்டம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன், 43. இவர், இன்று காலை 6:00 மணிக்கு ஆருட்டுபாறையில் உள்ள, தன் டீ கடையை திறக்க சாலை வழியாக நடந்து வந்தார். அப்போது, எதிரே வந்த காட்டு யானையை பார்த்து, காபி தோட்டத்துக்குள் ஓடி தப்பிக்க முயன்றார். ஆனால், யானை அவரை துரத்தி சென்று தாக்கியது. இதில், படுகாயம் அடைந்த அவர், உயிரிந்தார். தகவல், அறிந்து வந்து வனத்துறையினர், உடலை எடுக்க முயன்றனர். ஆனால், மக்கள், 'இது போன்ற பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என, வலியுறுத்தி, உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வனத்துறையினர், போலீசார் மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-மே-202215:51:21 IST Report Abuse
Lion Drsekar மிகவும் வருத்தப்படவேண்டிய ஒரு நிலை, முட்டையில் இருந்து கோழி வந்ததா அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா என்பது போல் காட்டு மிருகங்களின் வாழ்வாதாரத்தில் நாம் ஆக்கிரமித்த இடமா அல்லது நாம் இருக்கும் இடத்துக்கு அவர்கள் உணவு தேடி வருகிறார்களா என்று ? ஆக மனசாட்சியுடன் செயல்பட்டால் தீர்வு நிச்சயம், இங்குதான் ஒரு ரேஷன் கடையில் கொடுக்கவேண்டிய பொருளை பெறுவதற்கு அமைச்சரின் சிபாரிசு தேவை என்ற நிலையில் எங்ங எந்த நியாத்தை எதிரார்க்க முடியும், இந்த நிலை யார் ஆட்சிக்கு வந்தாலும் அதே நிலைதான். மனிதன் மாறவில்லை, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X