உருது மொழியை தடை செய்வோம்: தெலுங்கானா பா.ஜ., தலைவர் சர்ச்சை

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும் எனவும், ராம ராஜ்ஜியம் வந்தால் உருது மொழி தடை செய்வோம் எனவும் அம்மாநில பா.ஜ., தலைவர் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற யாத்திரையில் அம்மாநில பா.ஜ., தலைவர் பண்டி சஞ்சய் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மசூதி வளாகங்களில்
Completely Ban, Urdu Language, Rama Rajya, Telangana, BJP chief, Bandi Sanjay Kumar, தெலுங்கானா, பாஜக, பாஜ, தலைவர், உருது, மொழி, தடை, ராம ராஜ்ஜியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஐதராபாத்: தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும் எனவும், ராம ராஜ்ஜியம் வந்தால் உருது மொழி தடை செய்வோம் எனவும் அம்மாநில பா.ஜ., தலைவர் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற யாத்திரையில் அம்மாநில பா.ஜ., தலைவர் பண்டி சஞ்சய் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மசூதி வளாகங்களில் எங்கு தோண்டினாலும் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. மாநிலத்தின் அனைத்து மசூதிகளையும் தோண்டி எடுப்போம். சிவலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த மசூதிகளை முஸ்லிம்கள் ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஏதேனும் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டால் அந்த இடத்தின் உரிமையை முஸ்லிம்கள் கோரலாம்.


latest tamil news


தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும். பா.ஜ.,வும் இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளது. அதுபோல தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, உருது மொழிக்கு தடை விதிக்கப்படும். 'ராம ராஜ்ஜியம்' வந்தால் உருது மொழியை முற்றிலும் தடை செய்வோம். முஸ்லிம்களின் கல்விக்கூடமான 'மதரஸாக்கள்' பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக மாறியிருப்பதால் அவர்களை அடையாளம் காண வேண்டும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தில் அனைத்து மதரஸாக்களும் மூடப்படும். இவ்வாறு அவர் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
26-மே-202220:16:57 IST Report Abuse
Tamilan மாநில உள்துறை உருது மொழிக்காரர்களிடம் உள்ளது. ஏற்கனவே இவரை ஜெயில் தள்ளினார்கள் . இனியும் அப்படி நடக்கலாம் . தீவிரவாதிகளிடம் உள்துறையை கொடுத்து ஹைதராபாத்தில் தீவிரவாதி கட்டுப்படுத்திவிட்டது ராவ் அரசு .
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
26-மே-202220:03:59 IST Report Abuse
Svs Yaadum oore //..தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ...//..தெலுங்கானா திராவிட மாடல் தானே . அப்பறம் என்ன பிரச்சனை ?. திராவிட மாடல் கொள்கையை அவர் சொல்றாரு . உருது மொழியை தடை செய்வோம் என்றால் திராவிட மாடலுக்கு என்ன பிரச்சனை ? . அதுக்கு ஏன் இங்குள்ளவன் பொங்கனும் ?.
Rate this:
Cancel
26-மே-202219:18:55 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் எல்லா மொழியும் சமமாக நடத்தப்படடால், 70 விழுக்காடு இந்தி பயன்பாடு குறித்து உள்துறை அமைச்சர் பேசியதை கண்டிக்கும் நேர்மையும் துணி வும் உண்டா? சமஸ்க்ருத மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படட அளவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட்தா?
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
28-மே-202206:46:40 IST Report Abuse
Fastrack..கோடிங் படிச்சா வயித்து பொழப்புக்கு உதவும் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X