பயனர்களின் தகவல்கள் விற்பனை: டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.1,165 கோடி அபராதம்

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
வாஷிங்டன்: பயனர்களின் தகவல்களை பாதுகாக்காமல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்றதாக டுவிட்டர் நிறுவனம் மீதான வழக்கில், அந்நிறுவனத்திற்கு ரூ.1,165 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.230 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருக்கும் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டர், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், லாகின் வசதி பாதுகாப்புக்காகவும் பயனர்களின் மொபைல் எண், இமெயில் முகவரியை சேமித்து
Twitter, Privacy, Security Violations, டுவிட்டர், பயனர்கள், தகவல்கள், பாதுகாப்பு, அபராதம்

வாஷிங்டன்: பயனர்களின் தகவல்களை பாதுகாக்காமல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்றதாக டுவிட்டர் நிறுவனம் மீதான வழக்கில், அந்நிறுவனத்திற்கு ரூ.1,165 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

230 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருக்கும் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டர், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், லாகின் வசதி பாதுகாப்புக்காகவும் பயனர்களின் மொபைல் எண், இமெயில் முகவரியை சேமித்து வைக்கும் என துவக்கத்தில் அறிவித்திருந்தது. ஆனால் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை விளம்பர நிறுவனங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் டுவிட்டர் கைமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்த வழக்கை கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றம் விசாரித்தது.


latest tamil news


அப்போது டுவிட்டருக்கு எதிராக வாதாடிய பெடரல் டிரேட் கமிஷன், ‛டுவிட்டரை நம்பி வந்த பயனர்களின் தரவுகளை அவர்களுக்கு தெரியாமல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்றது தவறு. இந்த வியாபாரத்தால் டுவிட்டர் பல மடங்கு லாபத்தை வம்பாரித்ததாக' வாதாடியது. இதனையடுத்து, பயனர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்தியதற்காக, 150 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1165 கோடி) அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அபராத தொகையை செலுத்த டுவிட்டர் நிறுவனமும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
26-மே-202219:43:51 IST Report Abuse
Tamilan நீதிமன்றங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் . இவர்கள் எதுவுமே சம்பாதிக்காமல் எப்படி இந்த ட்விட்டர் என்ற சமூக கொட்டாரத்தின் , விஞ்சான கொட்டாரத்தின் மதிப்பு 40 பில்லியன் டாலர் ஆனது ?. கொள்ளையர்களின் கூடாரம், கொடூரர்களின் கொட்டாரம்தான் அணைத்து சமூக வலைதளங்களும் . பெரும்பாலான முன்னணி மீடியாக்களும் கூட .
Rate this:
Cancel
Natarajan V - Bengaluru,இந்தியா
26-மே-202218:37:56 IST Report Abuse
Natarajan V ரூ.1,165 கோடி அபராதத்தில நமக்கு என்ன கிடைக்கும்? என்னா திருடனது நம்ம டேட்டா ... நமக்கு தான் பைசா வரணும்.
Rate this:
Kannan - Madurai,கனடா
27-மே-202201:44:36 IST Report Abuse
Kannanமிகச் சரியான கேள்வி, யாரிடம் அவர்கள் அபராதம் செலுத்துவார்கள்? இழப்பீடு மக்களுக்குத்தான் வழங்க வேண்டும்....
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
26-மே-202217:35:27 IST Report Abuse
sridhar பயனர்களின் தகவல்கள் விற்பனை: டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.1,165 கோடி அபராதம் indha அபராததினால் யாருக்கு லாபம் அத சொல்லுங்க பாஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X