ரூ.31,400 கோடியில் பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் மோடி

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை: சென்னை வந்த பிரதமர் மோடி ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைத்தார்.சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரயில்வே, நெடுஞ்சாலை, தொழில்துறை உள்ளிட்ட துறைகளின் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைத்தார். இதில், ரூ.2,900 கோடி மதிப்பிலான, ஐந்து திட்டங்களை, பிரதமர் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். அத்துடன், ரூ.28,500 கோடி மதிப்புள்ள, ஆறு
PMModi, Launch Schemes, LayFoundation Stone, Projects, Tamil Nadu, தமிழகம், பிரதமர் மோடி, திட்டங்கள், துவக்கி வைப்பு, அடிக்கல்,

சென்னை: சென்னை வந்த பிரதமர் மோடி ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைத்தார்.

சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரயில்வே, நெடுஞ்சாலை, தொழில்துறை உள்ளிட்ட துறைகளின் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைத்தார். இதில், ரூ.2,900 கோடி மதிப்பிலான, ஐந்து திட்டங்களை, பிரதமர் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். அத்துடன், ரூ.28,500 கோடி மதிப்புள்ள, ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக வரவேற்புரை ஆற்றிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:


latest tamil news


தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். நமது பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை தமிழக மக்கள் சார்பாக வரவேற்கிறேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள நாடாக திகழ்கிறது. கொரோனா காலகட்டத்திலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் இருந்தது. அக்காலக்கட்டத்தில் பொருளாதாரத்தை காத்தவர் மோடி. புதிய கல்விக்கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும். டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களுக்காக நன்றி. தமிழகத்தில் சாலை, ரயில்வே திட்டங்கள் மூலம் அடிப்படை கட்டமைப்புகளை பிரதமர் மேம்படுத்துகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

முடிவுற்ற 5 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த திட்டங்கள்:


latest tamil news


* 75 கி.மீ தூரமுள்ள மதுரை - தேனி இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதை.

* தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 3வது ரயில் பாதை.
* எண்ணூர் - செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ தூரத்துக்கு குழாய் வழியே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் திட்டம்.
* பெங்களூரு - திருவள்ளூர் பிரிவில் 271 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள குழாய் வழியே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் திட்டம்.
* கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின் கீழ் அந்த சுற்றுவட்டாரத்தில் குடியிருப்போருக்காக கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளையும் பயனாளிகளுக்கு ஒப்படைக்கிறார்.

இதே விழாவில் 6 பிரமாண்டமான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அந்த திட்டங்கள்:


latest tamil news


* சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் திட்டங்களுக்கு அடிக்கல்.
* சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை அருகே மப்பேட்டில் பன்மாதிரி போக்குவரத்து பூங்கா (மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்) அமைப்பதற்கான அடிக்கல்.
* துறைமுகம்-மதுரவாயல் இடையே அமைக்கப்படும் இரண்டடுக்கு மேம்பாலம்.
* சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைவு வழி சாலை.
* பெங்களூரு - தர்மபுரி இடையே 4 வழிச்சாலை அமைத்தல்.
* மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை 32 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில்தனி பாதைகள்.


வரவேற்பு


முன்னதாக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் கவர்னர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, சென்னை மேயர் பிரியா, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், தலைமை செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் அடையாறில் உள்ள ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.


கையசைத்து மகிழ்ச்சி


latest tamil news


கடற்படை தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கம் சென்ற மோடிக்கு பா.ஜ., தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் சிறுவர்கள் மேள தாளங்கள் அடித்தும், சிலம்பம் சுற்றியும் வரவேற்றனர். மேலும், பிரதமர் காரின் மீது பூக்களை தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது பா.ஜ., தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் காரை நிறுத்திய அவர் வரவேற்பை ஏற்கும் விதமாக தொண்டர்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மே-202221:14:00 IST Report Abuse
PREM KUMAR Bangalore அரசு விழாவில் உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என கருணாநிதியின் அரசியல் வசனத்தை ஸ்டாலின் கூறி, விழாவின் மான்பை குறைத்து விட்டதால் பிரதமர் தனது பேச்சை முழுமையாக்காமல் குறைத்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
26-மே-202220:02:03 IST Report Abuse
sankaseshan 31 ஆயிரம்கொடியை தூக்கி கொடுத்து விட்டால் ததமிழக அரசு திட்டங்களுக்கு தன்னுடைய சாதனை என்று விளம்பரம் ஒட்டிக்கொள்ளும் தமிழன் ,பற்றாளன் நடேசன் போன்றோருக்கு பொறாமை பிரதமரை தூற்றுகிறார்கள் காங்கிரஸ் ஆட்சியில் தோலைநோக்கு பார்வை கிடையாது Dynasty குடும்பத்தின் பேச்சிலும் மூச்சிலும் தெரியும் அவர்கள் செய்தது கொள்ளையடித்தது மட்டுமே
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
26-மே-202219:44:47 IST Report Abuse
தியாகு ஹி...ஹி...ஹி...மாநில அரசிடம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டால் அதில் பாதி தொகை கோபாலபுர குடும்பத்திற்கு சென்றுவிடும். அதனால்தான் மத்திய அரசே செயல்படுத்துகிறது. ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X