புத்துயிர் பெறுகிறது அம்பாசிடர்: தயாரிப்பு பணிகள் மும்முரம்

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட 'அம்பாசிடர்' கார், மீண்டும் சாலையில் பவனிக்க வருகிறது. 'ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் பியூஜியோ' ஆகிய நிறுவனங்கள் இணைந்து, அம்பாசிடர் காருக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்துள்ளன.புதிய அம்பாசிடர் கார் மாடல், சென்னையிலுள்ள 'ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்' நிறுவன

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட 'அம்பாசிடர்' கார், மீண்டும் சாலையில் பவனிக்க வருகிறது.latest tamil news'ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் பியூஜியோ' ஆகிய நிறுவனங்கள் இணைந்து, அம்பாசிடர் காருக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்துள்ளன.புதிய அம்பாசிடர் கார் மாடல், சென்னையிலுள்ள 'ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்' நிறுவன ஆலையில் தயாரிக்கப்படும் என தெரிகிறது.இந்த ஆலை, சி.கே.பிர்லா குழுமத்தின் அங்கமான ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் நிறுவனம் வசம் உள்ளது.


latest tamil news
இது குறித்து, ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் உத்தம் போஸ் கூறியதாவது:புதிய அம்பாசிடர் காரை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய காரின் புதிய இன்ஜினுக்கான மெக்கானிக்கல் மற்றும் வடிவமைப்பு பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அம்பாசிடர் கார், 1960களிலிருந்து 1990ம் ஆண்டு மத்தி வரை, ஒரு 'ஸ்டேட்டஸ் சிம்பலாக' கருதப்பட்டது. குடியரசு தலைவர், பிரதமர் துவங்கி, பலரும் இந்த காரை தான் பயன்படுத்தி வந்தனர்.இதன்பின் புதிய பிராண்டு கார்கள் வரவும், அம்பாசிடர் தன் பொலிவை இழக்கத் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, 2014ல் தயாரிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதன்பின் அம்பாசிடர் பிராண்டை, பிரெஞ்சு நிறுவனமான பியூஜியோ வாங்கியது. தற்போது மீண்டும் அம்பாசிடர் பிராண்டு காரை தயாரிக்கும் முயற்சியில் பியூஜியோவும், ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் கார்ப்பரேஷனும் இறங்கி உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
27-மே-202208:59:59 IST Report Abuse
Venugopal S அம்பாஸடர் காரும் சமஸ்கிருதமும் ஒன்று. என்ன செலவு செய்து தலைகீழாக நின்றாலும் செத்துப் போனதைப் பிழைக்க வைக்க முடியாது. இவை இரண்டுக்கும் செய்யும் செலவு காசுக்குப் பிடித்த கேடு.
Rate this:
27-மே-202211:16:45 IST Report Abuse
சுந்தரர்நடுத்தர மக்களின் ராஜா அம்பாசடர். சாலைகளின் ராஜா அம்பாசடர். Ambassador is a royal vehicle, which is still used by a lakhs of people. please open your eyes. i have an Ambassador car with power steering power windows and chill a/c with central locking mechanism. i will buy the new ambassador car...
Rate this:
Cancel
KMP - SIVAKASI,இந்தியா
27-மே-202206:38:01 IST Report Abuse
KMP வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
27-மே-202205:54:38 IST Report Abuse
Sai அழகில் லக்ஷணத்தில் அம்பாசிடர் காருக்கு ஈடு இணையில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X