இதே நாளில் அன்று.. ஜவஹர்லால் நேரு மறைந்த தினம்

Added : மே 26, 2022 | |
Advertisement
மே 27, 1964 உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில், மோதிலால் நேரு - சுவரூபராணி தம்பதிக்கு மகனாக, 1889 நவம்பர், 14ல் பிறந்தவர் ஜவஹர்லால் நேரு. பிரிட்டனின் ஹார்ரோவில் பள்ளிப் படிப்பையும், டிரினிட்டி கல்லுாரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். 1916ல், கமலா கவுலை மணந்து, அடுத்தாண்டு இந்திரா பிரியதர்ஷினியை பெற்றார்.வக்கீல் தொழில் செய்ய இந்தியா வந்த நேரு, 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக்
இதே நாளில் அன்று.. ஜவஹர்லால் நேரு மறைந்த தினம்


மே 27, 1964


உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில், மோதிலால் நேரு - சுவரூபராணி தம்பதிக்கு மகனாக, 1889 நவம்பர், 14ல் பிறந்தவர் ஜவஹர்லால் நேரு. பிரிட்டனின் ஹார்ரோவில் பள்ளிப் படிப்பையும், டிரினிட்டி கல்லுாரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். 1916ல், கமலா கவுலை மணந்து, அடுத்தாண்டு இந்திரா பிரியதர்ஷினியை பெற்றார்.

வக்கீல் தொழில் செய்ய இந்தியா வந்த நேரு, 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையால் மனம் மாறி, மகாத்மா காந்தி தலைமையிலான சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அகில இந்திய காங்கிரசுக்கு செயலராகி, பல்வேறு போராட்டங்களை நடத்தினார். 'ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை நடத்தியதற்காக, 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகி, தேசிய கொடியை ஏற்றினார்.



பிரதமராக பதவி வகித்த போது, அணை கட்டுதல், சுரங்கம் வெட்டுதல், கனரக தொழிற்சாலைகள் துவக்குதல், உரம், மின்சார உற்பத்தி, உயர் கல்வி மற்றும் விவசாய மேம்பாட்டுக்காக, ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்தினார்.உலகப் பிரச்னைகளை தீர்த்ததோடு, அணிசேரா கொள்கை'யையும் உருவாக்கினார்.



நவீன இந்தியாவின் சிற்பியான நேரு, 1964 இதே நாளில், தன், 75வது வயதில் மாரடைப்பால் மரணித்தார்.



குழந்தைகளை நேசித்த மனிதருள் மாணிக்கம் மறைந்த தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X