சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 59 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 43 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 33 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
![]()
|
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று(மே 26) 15,665 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 59 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,55,099 ஆக உள்ளது. மேலும் தற்போது வரை 6,65,58,845 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 34 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 20,16,389 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 14,38,672 ஆகவும் உள்ளது. 43 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,16,687 ஆக உள்ளது.
கோவிட் பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை. இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று (மே 25) 30 ஆக இருந்த நிலையில் இன்று (மே 26) 33 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட நிலவரம்
![]()
|
![]()
|
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement