நாட்டின் பொருளாதார வளர்ச்சி; 'மூடிஸ்' நிறுவனத்தின் கணிப்பு

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி-நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, 'மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. நடப்பு 2022ம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9.1 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணித்து அறிவித்திருந்த நிலையில், அதை தற்போது குறைத்து, 8.8 சதவீதமாக அறிவித்துள்ளது, மூடிஸ் நிறுவனம்.இது குறித்து, இந்நிறுவன

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, 'மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது.



latest tamil news



நடப்பு 2022ம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9.1 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணித்து அறிவித்திருந்த நிலையில், அதை தற்போது குறைத்து, 8.8 சதவீதமாக அறிவித்துள்ளது, மூடிஸ் நிறுவனம்.இது குறித்து, இந்நிறுவன அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டின் வளர்ச்சி, நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கும் எடுத்து செல்லப்பட்டது.


latest tamil news



இருப்பினும், கச்சா எண்ணெய், உணவு, ரசாயனம் ஆகியவற்றின் விலை உயர்வு, குடும்பங்களின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களின் செலவினங்களை குறைத்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி உயர்வை அறிவிக்கும் நிலையில், தேவைகளுக்கான மீட்சி தாமதமாகும்.

இது போன்ற காரணங்களால், நடப்பு ஆண்டில், பொருளாதார வளர்ச்சியை 9.1 சதவீதத்திலிருந்து, 8.8 சதவீதமாக குறைத்து கணித்து அறிவித்து உள்ளோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
27-மே-202208:56:20 IST Report Abuse
Venugopal S ஒவ்வொரு வருடமும் இதேபோல் தான் ஆரம்பத்தில் ஆஹா ஓஹோ என்று சொல்கிறார்கள், கடைசியில் சொதப்பி விடுகிறார்கள். இதுதான் மத்திய பாஜக அரசின் திறமை.
Rate this:
Cancel
selva kppk - kuala lumpur,மலேஷியா
27-மே-202207:47:51 IST Report Abuse
selva kppk இந்த மாதிரி கொஞ்சம் economic sense உள்ள நியூஸுக்கு கமெண்ட்ஸ் போடவே மாட்டார்கள்.
Rate this:
27-மே-202211:04:27 IST Report Abuse
ஆரூர் ரங்நான் நிறைய கருத்துப் போடுகிறேன். எத்தனை வாசகர்கள் அந்த நிதி பொருளாதார செய்திகளைப் படிக்கிறார்கள்? 🤔பலருக்கு ஜல்லிக்கட்டு, ஹிந்தி எதிர்ப்பு போன்ற அறிவை வளர்க்கும் செய்திகளே போதும்....
Rate this:
selva kppk - kuala lumpur,மலேஷியா
27-மே-202213:30:54 IST Report Abuse
selva kppk.............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X