பெண் எம்.பி., சமைக்க போகலாம்; பா.ஜ., பிரமுகர் பேச்சால் சர்ச்சை

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
மும்பை-மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த எம்.பி., சுப்ரியா சுலேவிடம், ''அரசியல் தெரியாமல் பேசுவதை விட வீட்டில் சமைக்கப் போகலாம்,'' என, மாநில பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் புரியவில்லைமஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை-மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த எம்.பி., சுப்ரியா சுலேவிடம், ''அரசியல் தெரியாமல் பேசுவதை விட வீட்டில் சமைக்கப் போகலாம்,'' என, மாநில பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.latest tamil news
அரசியல் புரியவில்லைமஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அரசு அக்கறையின்றி உள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது.

இது குறித்து தேசியவாத கட்சி எம்.பி.,யான சுப்ரியா சுலே பேசியதாவது:ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் டில்லி வந்து சிலரை சந்தித்தார். அடுத்த இரண்டு நாட்களில் ம.பி., உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மஹா.,வில் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு மஹாராஷ்டிரா பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பதில் கூறியதாவது:சுப்ரியா சுலே ஏன் அரசியலில் இருக்கிறார் என தெரியவில்லை. ஒரு முதல்வரை, யாருமே முன் அனுமதியுடன் தான் சந்திக்க வேண்டும் என்பது கூட, எம்.பி.,யான இவருக்கு தெரியவில்லை. அரசியல் புரியவில்லை என்றால், வீட்டிற்கு சென்று சமைக்க வேண்டியது தானே. நீங்கள் டில்லி அல்லது கல்லறைக்கு கூட செல்லுங்கள். எங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தாருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news

உழைப்பாளிஇது, மஹாராஷ்டிராவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ''பா.ஜ., பெண்ணடிமை கட்சி,'' என, சுப்ரியா சுலேவின் கணவர் சதானந்த் தெரிவித்துள்ளார். ''தாய், குடும்பத் தலைவி, வெற்றிகரமான அரசியல்வாதி, கடுமையான உழைப்பாளி என, பல பெருமைகளை பெற்ற என் மனைவியை இழிவுபடுத்தியது, இந்திய பெண்களை இழிவுபடுத்தியதற்கு சமம்,'' என, சதானந்த் கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-202210:37:05 IST Report Abuse
பாமரன் அந்த நபர் டிசைன் படி பேசியிருக்காப்ல... என்ன தப்பு...🙄
Rate this:
Cancel
27-மே-202210:31:05 IST Report Abuse
வீரா சுப்ரியாவின் தந்தை சரத் பவார் சிறிது நாட்களுக்கு முன் டெல்லி சென்று மோடியை சந்தித்து தம் குடும்ப உறுப்பினர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளை நீக்க வேண்டினார். அப்போது இட ஒதுக்கீடு பற்றி கோரிக்கை வைத்து இருக்கலாமே. சுப்ரியா ம பி முதல்வரை (20 வருடங்களுக்கு மேல் முதல்வராக இருப்பவரை) தேவையில்லாமல் இழுத்தது மட்டும் எப்படி சரியாகும்? சுப்ரியா தன் கணவரை பேச அனுமதித்ததே ஒரு அதிசியம். ராஜ் தாக்கரே செய்ததைத்தான் மகாராஷ்டிரா சுயட்சை பெண் எம்பி செய்தார் ஏன் ராஜ் தாக்கரே மீது வெறும் வழக்கு மட்டும் பதிவு செய்து பெண் எம்பியை மட்டும் கைது செய்து உள்ளே வைத்தீர்கள்?பெண் உரிமை பேச தகுதி வேண்டாமா?
Rate this:
Cancel
bsjdkk -  ( Posted via: Dinamalar Android App )
27-மே-202209:20:01 IST Report Abuse
bsjdkk politics is what how to loot public money and expose power among common man who struggle, for the life oh him and family everyday
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X