வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : சென்னைக்கு இன்று(மே 26) வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை, தன் தோளோடு கட்டி அணைத்து, 'அண்ணாமலை ஹவ் ஆர் யூ?' எனப் பாசத்துடன் நலம் விசாரித்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, தீவுத்திடல் அருகில் உள்ள ஐ.என்.எஸ்., இந்திய கடற்படை தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் இன்று மாலை வந்தார். தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலர்கள் என பா.ஜ., நிர்வாகிகள் 12 பேர், பிரதமர் மோடியை வரவேற்றனர்.

அண்ணாமலை அருகில் வந்த மோடி, அவரை தன் தோளோடு கட்டி அணைத்து, 'அண்ணாமலை ஹவ் ஆர் யூ?' என்று பாசத்துடன் நலம் விசாரித்தார். அதற்கு அண்ணாமலை பதில் அளித்து, தன் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தார்.
நேரு உள் விளையாட்டரங்கில், விழா முடிந்து பிரதமர் புறப்பட்டபோது, பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம், 'அனைவரும் நலமா; ஏன் உங்கள் தலைமுடி வெள்ளை நிறமாக மாறிவிட்டது' எனக் கேட்டார். பிரதமரின் அன்பில் நெகிழ்ந்த நாராயணன் திருப்பதி, பதில் அளிக்க முடியாமல் சிரித்து சமாளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE