திருப்பதி,--ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஏழுமலையான் கோவில் கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் இந்த ஏற்பாட்டை அம்மாநில அரசுகளின் உதவியுடன் தேவஸ்தானம் செய்து வருகிறது.இதில் ஒரு பகுதியாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் புதிதாக ஏழுமலையான் கோவில் கட்டியுள்ளது.
இதற்காக கடந்த ஒரு வார காலமாக வேத பண்டிதர்கள் அடங்கிய குழு புவனேஸ்வர் சென்று அங்கு வைதீக காரியங்களில் ஈடுபட்டது. இங்கு நேற்று காலை மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தேறியது. மேலும் மாலையில் சீனிவாச கல்யாண உற்சவமும், உற்சவமூர்த்தி கள் மாடவீதி வலமும் நடந்தன. இதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர கவர்னர் விஸ்வபூஷன் ஹரிசந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE