3 நாட்கள் நடந்த தினமலர் வழிகாட்டி இனிதே நிறைவு| Dinamalar

3 நாட்கள் நடந்த 'தினமலர்' வழிகாட்டி இனிதே நிறைவு

Updated : மே 27, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (2) | |
உயர்கல்வி ஆலோசனை பெற்ற மாணவர், பெற்றோர் மகிழ்ச்சிசென்னை----பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல உதவும், மாணவர் திருவிழாவான, 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி, மூன்றாம் நாளான நேற்று, இனிதே நிறைவு பெற்றது. இதில், நிபுணர்களின் ஆலோசனை பெற்ற, மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம்; எதை படித்தால் வாழ்வு வளமாகும்;

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

உயர்கல்வி ஆலோசனை பெற்ற மாணவர், பெற்றோர் மகிழ்ச்சி

சென்னை----பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல உதவும், மாணவர் திருவிழாவான, 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி, மூன்றாம் நாளான நேற்று, இனிதே நிறைவு பெற்றது. இதில், நிபுணர்களின் ஆலோசனை பெற்ற, மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம்; எதை படித்தால் வாழ்வு வளமாகும்; எதிர்காலம் சிறக்கும் என்ற ஆலோசனைகளை தெரிவிக்கும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, கடந்த 24ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கியது.latest tamil news
நிபுணர்கள் ஆலோசனைகோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் கல்லுாரி பிரதிநிதிகளின் ஆலோசனை நிகழ்வுகள் இடம் பெற்றன.மூன்றாம் நாளான நேற்று, காலை முதல் பிற்பகல் வரை உயர்கல்வி ஆலோசனை கருத்தரங்கு நடந்தது. இதில், தொழிலதிபர் குமரவேல்; ஐ.டி., துறை வல்லுனர் சுரேஷ்குமார்; கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர் ராஜன்; அவதார் குழுமத்தின் இணை நிறுவனர் உமாசங்கர். சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியை தேன்மொழி; கல்வி ஆலோசகர்நெடுஞ்செழியன், முன்னணி வழக்கறிஞர் சத்யகுமார் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு பல்வேறு பாடப் பிரிவுகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்து, ஆலோசனைகள் வழங்கினர்.


latest tamil news


மூன்று நாட்களும் நடந்த உயர்கல்வி கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு, முற்பகல் மற்றும் பிற்பகல் என, இரண்டு வேளைகளிலும், பொது அறிவு போட்டி நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கையடக்க கணினியான டேப்லெட் மற்றும் வாட்ச்கள் பரிசாக வழங்கப்பட்டன.கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளுக்கு சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர், அங்கிருந்த கல்வி நிறுவன பிரதிநிதிகளிடம், கல்லுாரிகளின் பாடப்பிரிவுகள், சேர்க்கை முறை, கல்வி கட்டணம் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து, நேரடி ஆலோசனை பெற்றனர்.
இனிய நிறைவுஇதையடுத்து, மூன்று நாட்கள் மாணவர் திருவிழா போல, கோலாகலமாக நடத்தப்பட்ட வழிகாட்டி நிகழ்ச்சி, நேற்று மாலை இனிதே நிறைவு பெற்றது. மூன்று நாட்களும் உயர்கல்வி குறித்த ஆலோசனை பெற்ற மாணவர்களும், பெற்றோரும், உயர்கல்வியை தேர்வு செய்வது குறித்த குழப்பம் தீர்ந்து, தெளிவு பெற்றதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.கரம் கோர்த்த நெஞ்சங்களுக்கு நன்றி!

'தினமலர்' நாளிதழுடன், பிரதான ஸ்பான்ஸராக கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து, இந்த ஆண்டின் வழிகாட்டி நிகழ்ச்சி, மூன்று நாட்கள் நடந்தன. 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் செயல்பட்டன. பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் நிகர்நிலை பல்கலை, சென்னை ஷிவ் நாடார் பல்கலை, டாட் ஸ்கூல் ஆப் டிசைன், வேல்ஸ் நிகர்நிலை பல்கலை, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து, வழிகாட்டி நிகழ்ச்சியை வழங்கின. மூன்று நாட்களும், 'தினமலர்' நாளிதழுடன் கரம் கோர்த்து, மாணவர்களுக்கு ஆலோசனை அளித்த, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், கருத்தரங்கில் பங்கேற்ற துறை சார் வல்லுனர்களுக்கும், தினமலர் நாளிதழ் சார்பில், நெஞ்சார்ந்த நன்றிகள்.நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் இணைந்து செயல்பட்ட, சென்னை மாநகர போலீஸ், தீயணைப்பு துறை மற்றும் கலைவாணர் அரங்க அலுவலர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் பேராசிரியர் ராஜன் பேசியதாவது:

சராசரி மாணவராக இருந்தால்கூட போதும். ஆனால், நுண்ணறிவு திறனும், பிரச்னைகளை கையாளும் பக்குவமும் தான், ஒருவரை வெற்றியாளர் வரிசையில் இணைக்கிறது. தோல்வியின் அச்சத்தை ஒருவர் கடந்து விட்டால், அவர் வெற்றி பெற்று விடுவார்.இன்ஜினியரிங்கும், மருத்துவமும் மட்டுமே சிறந்த வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று நினைக்க வேண்டாம். கலை மற்றும் அறிவியல் படிப்புகளில், அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் ஏராளம் உள்ளன. எனவே, பிடித்த படிப்பு கிடைக்காவிட்டால், கிடைத்த படிப்பை பிடித்து படியுங்கள்; எதிர்காலம் சிறப்பாகும். அரசு துறைகளிலும், கல்வி துறையிலும், தொழிற்துறையிலும், அறிவியல் பட்டதாரிகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பி.காம்., போன்ற அக்கவுன்ட்ஸ் தொடர்பான படிப்புகளுக்கு வங்கி மற்றும் காப்பீட்டு துறைகளில், வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. பட்டப்படிப்பை தேர்வு செய்வதில், நீங்களும், குடும்பத்தினரும் சேர்ந்து ஆய்வு செய்யுங்கள்.நண்பர் சேர்ந்து விட்டார். பக்கத்து வீட்டில் உள்ளவர் படிக்கிறார் என்று, எந்த படிப்பிலும் கண்ணை மூடிக்கொண்டு சேர வேண்டாம். சிறந்த கல்லுாரியாக உள்ளதா, கட்டமைப்புகள் சரியாக உள்ளனவா, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துகின்றனரா, தொழில்துறையுடன் சேர்ந்து, அவர்களின பாடத் திட்டத்தையும் இணைத்து நடத்துகின்றனரா என்பதை அறிந்து, அந்த கல்லுாரிகளில் சேர்ந்தால், வேலைவாய்ப்பு பெறுவது எளிதாகும்.இவ்வாறு அவர் பேசினார்.

கல்வி கடன் பெறுவது எப்படி?

பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் அதிகாரி விருத்தாச்சலம், கல்வி கடன் பெறுவது குறித்து கூறியதாவது:உயர்கல்வி நிறுவனங்களில் முறைப்படி அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் அனைத்து படிப்புகளை படிக்கவும், மாணவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. கல்வி கடன் என்பது கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், விடுதி வாடகை, நோட்டு புத்தகங்கள், மடிகணினி வாங்கும் செலவு என, அனைத்து செலவுகளையும் இணைத்து வழங்கப்படுகிறது.வங்கி கடன் பெற, கல்லுாரிகளில் இருந்து கட்டண விபர அறிக்கை பெற்று, அதை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். உள்நாட்டில் படிக்க, 10 லட்சம் ரூபாய் பெறலாம். நான்கு லட்ச ரூபாய் வரை, எந்த பிணை ஆவணங்களும் வழங்க வேண்டாம்.மத்திய அரசின் வித்யாலட்சுமி திட்டத்தில், ஆன்லைனில் விண்ணப்பித்தால், எளிதில் வங்கியை அணுகி, கல்வி கடன் பெற முடியும். கடன் பெறுவதாக இருந்தால், வங்கியை அணுகி முதலில் அதற்கான ஆவணங்களை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் ஆலோசனை''தேசிய அளவில் பல்வேறு துறை சார்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கும் தமிழக மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்,'' என, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் பேசியதாவது:இந்தியாவில்தான், குறைந்த வயதுள்ள இளைஞர்கள் அதிகம் உள்ளனர். நம் நாட்டு இளைய தலைமுறைகளால் நாட்டையும், உலகையும் வழி நடத்தும் அளவுக்கு சக்தி உள்ளது. அதை புரிந்து கொண்டு படிப்பை தேர்வு செய்ய வேண்டும். நம் தனித்திறன்களை அடையாளம் கண்டு, தற்கால தேவைக்கேற்ப நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.எந்த மாணவனாலும் முடியாது என்பதில்லை. பிளஸ் 2வில் சாதாரண சராசரி மதிப்பெண் எடுத்தவர்கள், பட்டப் படிப்பில் முன்னிலை பெற்று, வாழ்வில் உயர்ந்துள்ளனர். இன்னும் இன்ஜினியரிங், மருத்துவம் என்ற இரண்டு படிப்புக்கும் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கக் கூடாது. அதையும் தாண்டி, தொழில்நுட்ப ரீதியாக ஏராளமான படிப்புகள் உள்ளன.இந்தியாவில், 80 வகை நுழைவு தேர்வுகள் உள்ளன. இவற்றில், 75 தேர்வுகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண்ணே கணக்கில் எடுப்பதில்லை. எனவே, பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களும், நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து, தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் சிறந்த படிப்புகளில் சேர்கின்றனர். என்.ஐ.டி., - ஐ.ஐ.எம்., தேசிய மூளை ஆராய்ச்சி படிப்பு மையம் என, நம்முன் ஏராளமான உயர்கல்வி நிறுவனங்களும், அதற்கான படிப்புகளும், லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகளும் உள்ளன. எனவே, இதுதான் பிடித்த படிப்பு, பிடித்த வேலை என்று, எல்லையை சுருக்கி கொள்ளக்கூடாது. வரும் வாய்ப்புகளை பயன்படுத்த கற்று கொள்ள வேண்டும். அகில இந்திய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பில் சேர முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

'கடின உழைப்பும், சுறுசுறுப்பும் அவசியம்'

அவதார் குழும இணை நிறுவனர் உமாசங்கர் பேசியதாவது: பிளஸ் 2 முடித்ததும் நம் படிப்புகள் முடிந்து விட்டதாக நினைக்க கூடாது. ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், மெட்டாவேர்ஸ் என, பல்வகை தொழில்நுட்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. இவற்றையெல்லாம் நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்.அதற்கான படிப்புகளை தேர்வு செய்து கொள்ளுங்கள். கடின உழைப்பும், சுறுசுறுப்பும் மாணவர்கள் எதிர்கால வாழ்வை சிறப்பானதாக்க அவசியம். நமது உழைப்பின் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அதிக சம்பளம், ஆடம்பரமான வாழ்க்கை, நிம்மதியான குடும்பம் என்பதையும் தாண்டி, உலகின் வேகத்துக்கு ஈடு கொடுக்கவும் பழகி கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X