சென்னை,-உடல்நலக் குறைவால், நகைச்சுவை நடிகர் 'போண்டா' மணி, 58, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் 'போண்டா' மணி, பொல்லாதவன், அழகர் மலை, வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்துஉள்ளார்.பிரபல நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, விவேக் ஆகியோருடன் இணைந்து, பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், சிறுநீரக பிரச்னை காரணமாக, உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, நேற்று முன்தினம் இரவு, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துமனையில், 'போண்டா' மணி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், சிகிச்சை பெறும் 'போண்டா' மணிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களிடம், நடிகர் சங்க துணைத் தலைவர் 'பூச்சி' முருகன் பேசினார். 'போண்டா மணி நலமுடன் உள்ளார்; விரைவில் வீடு திரும்புவார்' என, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE