இசை கலைஞர் சுதா ரகுநாதனுக்கு எதிரானசைதை நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ரத்து

Added : மே 26, 2022 | |
Advertisement
சென்னை,-பிரபல இசை கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிரான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.ஒப்பந்தம்தென்னிந்திய இசை நிறுவனங்கள் சங்கத்தின் தலைவராக, பிரபல இசை கலைஞர் சுதா ரகுநாதன் இருந்தார். ஜெமினி என்டர்டெயின்மென்ட் மொபைல் இந்தியா சர்வீஸ் நிறுவனம், இசை நிறுவனங்கள் சங்கத்துடன், ஒப்பந்தத்தை மேற்கொண்டது.சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள

சென்னை,-பிரபல இசை கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிரான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.



ஒப்பந்தம்

தென்னிந்திய இசை நிறுவனங்கள் சங்கத்தின் தலைவராக, பிரபல இசை கலைஞர் சுதா ரகுநாதன் இருந்தார். ஜெமினி என்டர்டெயின்மென்ட் மொபைல் இந்தியா சர்வீஸ் நிறுவனம், இசை நிறுவனங்கள் சங்கத்துடன், ஒப்பந்தத்தை மேற்கொண்டது.சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள கலைஞர்களின் இசை உரிமம் வழங்குவது தொடர்பாக, இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. குறிப்பிட்ட தொகையை வழங்கிய ஜெமினி நிறுவனம், மீதி தொகையை செலுத்தாததால், ஒப்பந்தம் ரத்தானது.இதையடுத்து, தென்னிந்திய இசை நிறுவனங்கள் சங்கத் தலைவராக பதவி வகித்த சுதா ரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக, சைதை நீதிமனறத்தில், ஜெமினி நிறுவனம் புகார் மனுத் தாக்கல் செய்தது. அதை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.வழக்கை ரத்து செய்யக் கோரி, சுதா ரகுநாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களில், 'ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும், கொடுத்த பணத்தை திருப்பி பெறவும், ஜெமினி நிறுவனம் முயற்சித்தது. 'அதில், வெற்றி பெறாததால், எங்களுக்கு நிர்ப்பந்தம் அளிக்கும் வகையில், சங்கம் மற்றும் நிர்வாகிகள் ஏழு பேருக்கு எதிராக, நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்தனர்' என, கூறப்பட்டுள்ளது.




புகார் மனு

மனுக்களை, நீதிபதி சந்திரசேகரன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜேஷ் ஆஜராகி, ''சிவில் தன்மை வாய்ந்த வழக்கை, கிரிமினல் வழக்காக மாற்றி புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை, ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.மனுதாரர்கள் தரப்பில் தெரிவித்த வாதங்களை ஏற்று, சைதை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து, நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X