நிதி நெருக்கடியில் திணறும் மின் வாரியம்: உதவிக்கரம் நீட்ட மத்திய அரசு முடிவு

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை,-மின் சப்ளை நிறுவனங்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்படும் சிரமத்தை களைய, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் நிதி உதவி அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. மின் கொள்முதல்இதனால், மத்திய அரசின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை,-மின் சப்ளை நிறுவனங்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்படும் சிரமத்தை களைய, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் நிதி உதவி அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை.latest tamil news


மின் கொள்முதல்

இதனால், மத்திய அரசின் மின் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என, 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம், மின் வாரியம்மின் கொள்முதல் செய்கிறது. ஒப்பந்தப்படி, தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரம் வாங்கிய தேதியில் இருந்து, 30, 45 நாட்கள்; மத்திய அரசு நிறுவனங்களுக்கு, 60 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும். இல்லையேல் வட்டியுடன் சேர்த்து நிலுவை தொகை வழங்க வேண்டும்.தற்போது மின் வாரியம், நிதி நெருக்கடியில் இருப்பதால், மின் சப்ளை நிறுவனங்களுக்கு குறித்த காலத்தில் பணம் வழங்குவதில்லை. இதனால், சப்ளை நிறுவனங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டது.


புதிய நிபந்தனை

இதையடுத்து, தாமதம் இன்றி பணம் வழங்குவதை உறுதி செய்ய, 'குறித்த காலத்தில் பணம் வழங்க வேண்டும். இல்லையேல் பணத்திற்கான வங்கி உத்தரவாத கடிதம் தர வேண்டும். 'அதையும் தராவிட்டால், ஒப்பந்தம் செய்துள்ள சப்ளை நிறுவனங்கள், யாருக்கு வேண்டுமானாலும் மின்சாரம் விற்கலாம்' என, 2019 ஆகஸ்டில், மத்திய அரசு நிபந்தனை விதித்தது.அதையேற்ற தமிழக மின் வாரியம், 42 நிறுவனங்களுக்கு பல வங்கிகளில் இருந்து வங்கி உத்தரவாத கடிதம் அளித்தது. மின் வாரியத்தின் கடன், 1.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டிஉள்ளது. இதனால் சப்ளை நிறுவனங்களுக்கு பணம் வழங்குவது உள்ளிட்ட செலவினங்களை எதிர்கொள்வதில் கடும் சிரமம் நிலவுகிறது. இதே பிரச்னை பல மாநிலங்களிலும் உள்ளது.latest tamil news


உதவிக்கரம் நீட்டல்

எனவே, மின் சப்ளை நிறுவனங்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்படும் சிரமத்தை களைய, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் நிதி உதவி அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் சப்ளை நிறுவனங்களுக்கு, குறித்த அவகாசத்திற்குள் பணம் தராவிட்டால், மொத்த நிலுவை தொகைக்கும் வட்டி சேர்த்து வழங்க வேண்டும். பணம் தரவே சிரமமாக உள்ள நிலையில், வட்டியும் சேர்வதால் கூடுதல் சுமை ஏற்படுகிறது.இதை தவிர்க்க, மின் சப்ளை நிறுவனங்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகைக்கு என, குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயித்து, அதற்குள் வழங்கிவிட்டால் வட்டியை ரத்து செய்யலாமா என்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், சிக்கலுக்கு தீர்வு காண, மின் வாரியங்களுக்கு கடன் வழங்கலாமா என்றும் ஆலோசனை நடக்கிறது.இது குறித்து, மத்திய மின் துறையிடம் இருந்து, இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வரவில்லை. அந்த ஆணை கிடைத்தால் நிதி நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசிடம் இருந்து எந்த மாதிரியான நிதி உதவி, சலுகை வழங்கும் என்ற முழு விபரமும் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.ரூ.47 ஆயிரம் கோடி

தமிழக மின் வாரியம், 2020 - 21ம் நிதியாண்டில், மின் கொள்முதலுக்கு மட்டும், 47 ஆயிரத்து 988 கோடி ரூபாய் செலவு செய்தது. இது, 2019 - 20ல், 47 ஆயிரத்து 146 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த செலவில் மின் கொள்முதலின் பங்கு தான் முதலிடத்தில் உள்ளது.Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
27-மே-202220:15:26 IST Report Abuse
Sathya Where is squirrel Balaji and Corruption King
Rate this:
Cancel
27-மே-202213:56:01 IST Report Abuse
ஆரூர் ரங் ஏதாவது ஒரு மாவட்டத்தில் மட்டும் சோதனை முயற்சியாக டாடா பவர் போன்ற நிறுவனத்திடம் மின்வினியோகத்தை ஒப்படைத்துப்பாருங்கள். இதே🤔 கட்டணத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவர். எந்த தனியார் பஸ் நிறுவனமானது நஷ்டத்தில் இயங்குகிறதா? அரசு வணிகம் செய்தால் மக்கள்😪 பிச்சையெடுப்பர்.
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
27-மே-202213:06:25 IST Report Abuse
N. Srinivasan உச்ச நீதி மன்றம் தலையிட்டு இனிமேல் இலவச மின்சாரம் அல்லது இலவச போக்குவரத்து கிடையாது என்று ஒரு சட்டம் வந்தால் மிகவும் நல்லது. ஒரு பக்கம் இலவசத்தால் வரும் நஷ்டம் மற்றோரு பக்கம் மோசமான நிதி நிலைமை ......
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
28-மே-202207:12:17 IST Report Abuse
Neutral Umpireமந்திரி MLA இவர்களை பார்த்தால் வறுமையில் வாடுவது போல தெரியவில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X