கோவையில் நிறைவடைந்தது 'தினமலர் - வழிகாட்டி': உயர்கல்வி தகவல்களை பெற்ற மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | |
Advertisement
கோவை:கோவையில் உயர்கல்வி ஆலோசனை வழங்கிய, 'தினமலர் - வழிகாட்டி'நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது.கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சி கடந்த, 24ம் தேதி துவங்கியது. மூன்றாம் நாளான நேற்றும் பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கினர். எதிர்காலத்துக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி என்பதால், நேற்று பெற்றோர், மாணவர்களால், அரங்குகள்
கோவையில் நிறைவடைந்தது 'தினமலர் - வழிகாட்டி':   உயர்கல்வி தகவல்களை பெற்ற மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி

கோவை:கோவையில் உயர்கல்வி ஆலோசனை வழங்கிய, 'தினமலர் - வழிகாட்டி'நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது.கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சி கடந்த, 24ம் தேதி துவங்கியது. மூன்றாம் நாளான நேற்றும் பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

எதிர்காலத்துக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி என்பதால், நேற்று பெற்றோர், மாணவர்களால், அரங்குகள் நிரம்பி வழிந்தன. கண்காட்சியில், இடம் பெற்ற அரங்குகளில், கல்லுாரிகளில் உள்ள பாடப்பிரிவுகள், கட்டணம், அங்குள்ள பிற வசதிகள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆர்வமுடன் கேட்டனர்.


கைகோர்த்த நிறுவனங்கள்

'தினமலர்' நாளிதழுடன்,கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனம் இணைந்து, நிகழ்ச்சியை நடத்தியது. முக்கிய பங்களிப்பாளராக ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், 'ஸ்பான்சர்'களாக, கே.எம்.சி.எச்., அண்ட் டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரி, கற்பகம் கல்வி நிறுவனங்கள், குமரகுரு லிபரல் கலை, அறிவியல் கல்லுாரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி, எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்வி நிறுவனங்கள் ஆகியவை, நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன.

ஆலோசனை வழங்கிய வல்லுனர்கள்


கருத்தரங்கில், கலை பாடப்பிரிவு குறித்து மரியஜோசபின், அறிவியல் துறைகள் குறித்து சித்ரா, அரசு வேலைவாய்ப்புகள் குறித்து நித்யா, முன்னணி படிப்புகள் குறித்து ரமேஷ் பிரபா, பாதுகாப்பு களத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்து விவேக் ராம்குமார், சைபர் செக்யூரிட்டி குறித்து சையது முகமது ஆகிய நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கினர். மாணவர்கள், பெற்றோர்கள் தங்களது சந்தேகங்களை நிபுணர்களிடம் நேரடியாக கேட்டறிந்தனர்.

நன்றி! நன்றி! நன்றி!

'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்க உதவிய ஸ்பான்சர்கள், உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகம், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர், கொடிசியா நிர்வாகத்தினர், தொழில்நுட்ப உதவியாளர்கள், ஆலோசனைகள் வழங்கிய நிபுணர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், நன்றி, நன்றி, நன்றி.



பதில் அளித்து பரிசு அள்ளியவர்கள்


: 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சியில் நேற்று நடந்த கருத்தரங்கின் போது, பொது அறிவு கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு சரியாக பதில் அளித்தவர்களுக்கு, லேப்டாப், டேப்லெட், வாட்ச்கள், பரிசாக வழங்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்கள் மற்றும் வழிகாட்டி குறித்து சிறந்த வாசகம் (ஸ்லோகன்) தந்த கோவையை சேர்ந்த அர்ச்சனாஸ்ரீக்கு சிறப்பு பரிசாக லேப்டாப் வழங்கப் பட்டது. கோவையை சேர்ந்த கார்த்திக் ஆனந்த், நிதின் டேனியல் ஆகியோருக்கு டேப்லெட் பரிசாக வழங்கப்பட்டது. கோவையை சேர்ந்த கிஷோர், ஆதிசிவன், விமலா, சோனாலி பபிதா, கோவர்த்தன், சூரியபிரகாஷ், திருப்பூரை சேர்ந்த அனுஷா, தருணிகா, முத்துலட்சுமி, கிருஷ்ணா ஆகியோருக்கு வாட்ச்கள் வழங்கப்பட்டன.





புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X