தி.மு.க., - பா.ஜ., தொண்டர்கள் மோதல்

Added : மே 26, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை,-சென்னை சென்ட்ரல் அருகில் நேற்று, தி.மு.க.,வினர் பிரச்னை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சென்னைக்கு நேற்று வந்த பிரதமர் மோடியை, தமிழக பா.ஜ., தொண்டர்களும், நிர்வாகிகளும் சுவாமி சிவானந்தா சாலை முதல் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை நின்று வரவேற்றனர்.மாலை, 4:30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நின்றிருந்த பா.ஜ.,வினர், பிரதமர்
தி.மு.க., - பா.ஜ., தொண்டர்கள் மோதல்

சென்னை,-சென்னை சென்ட்ரல் அருகில் நேற்று, தி.மு.க.,வினர் பிரச்னை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னைக்கு நேற்று வந்த பிரதமர் மோடியை, தமிழக பா.ஜ., தொண்டர்களும், நிர்வாகிகளும் சுவாமி சிவானந்தா சாலை முதல் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை நின்று வரவேற்றனர்.மாலை, 4:30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நின்றிருந்த பா.ஜ.,வினர், பிரதமர் மோடியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

அங்கு, முதல்வர் ஸ்டாலினை வரவேற்க வந்த தி.மு.க.,வினர், ஸ்டாலினை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.அந்த இடத்தில் இருந்து பா.ஜ.,வினரை வெளியேறும்படி, தி.மு.க.,வினர் கூறினர். இதனால், தி.மு.க., - பா.ஜ., தொண்டர்கள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. போலீசார் வந்து, பா.ஜ., தொண்டர்களை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறினர். அதை ஏற்காத பா.ஜ., வை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், 'தி.மு.க.,வினரின் அராஜகம் ஒழிக' என்று கோஷங்களை எழுப்பியபடி, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அந்த சாலையில், 20 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உடனே, போலீசார் விரைந்து, பா.ஜ.,வினருடன் பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்துசென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
27-மே-202214:28:08 IST Report Abuse
r.sundaram ஆனாலும் போலீஸ் பிஜேபியினரைத்தான் கலைந்துபோக சொன்னார்களே அன்றி திமுகவினரை அல்ல. போலீசுக்கு தெரியும் யார் சொன்ன நல்லத்தனமாய் கேட்பார்கள் என்று. மேடையில் நேற்று ஸ்டாலின் நடந்துகொண்ட விதமே இதேமாதிரிதானே இருந்தது. எத்தனை ஒன்றிய அரசு என்று சொல்லி இருப்பார்? இவர்களுக்கு அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கவும் தெரியாது, மரியாதை வாங்கிக்கொள்ளவும் தெரியாது. படித்தம் அப்படி.
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
27-மே-202213:29:50 IST Report Abuse
ANANDAKANNAN K ஓசி பிரியாணி கேட்டு முஸ்லீம் சகோதர ஹோட்டலில் திமுக பிரமுகர், கடை உரிமையாளரை தாக்கினர், தான் தின்ற சாப்பாட்டுக்கு காசு கேட்ட அடிக்கும் கட்சி அது திமுக, பெரியகருப்பன் என்ற திருவாளர் வீடியோ வெளிவந்ததே, அதுக்கே திமுக கனியாக்க அந்தப்பெண் அதே வீடியோவில் புனிதமான காரியம் தான் செய்கிறார் என்று முட்டு கொடுத்தார் தானே, பிரியாணி கடை சண்டை திரு.ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க காரண காரியம் என்ன அது சிறுபான்மை மக்கள் நடத்தும் கடை அதனாலே தவிர வேறு ஏதும் இல்லை.ஏன் திமுக மட்டும் தான் ரோட்ல வாழ்க கோசம் போடணுமா அவர்களுக்குத்தான் திருட்டு பட்ட கொடுக்கப்பட்டுள்ளத , பிஜேபி வாழ்க கோசம் போட உரிமை இல்லையா ?
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
27-மே-202212:58:54 IST Report Abuse
Suppan திராவிட மாடலில் இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X