தி.மு.க., - பா.ஜ., தொண்டர்கள் மோதல்| Dinamalar

தி.மு.க., - பா.ஜ., தொண்டர்கள் மோதல்

Added : மே 26, 2022 | கருத்துகள் (11) | |
சென்னை,-சென்னை சென்ட்ரல் அருகில் நேற்று, தி.மு.க.,வினர் பிரச்னை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சென்னைக்கு நேற்று வந்த பிரதமர் மோடியை, தமிழக பா.ஜ., தொண்டர்களும், நிர்வாகிகளும் சுவாமி சிவானந்தா சாலை முதல் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை நின்று வரவேற்றனர்.மாலை, 4:30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நின்றிருந்த பா.ஜ.,வினர், பிரதமர்
தி.மு.க., - பா.ஜ., தொண்டர்கள் மோதல்

சென்னை,-சென்னை சென்ட்ரல் அருகில் நேற்று, தி.மு.க.,வினர் பிரச்னை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னைக்கு நேற்று வந்த பிரதமர் மோடியை, தமிழக பா.ஜ., தொண்டர்களும், நிர்வாகிகளும் சுவாமி சிவானந்தா சாலை முதல் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை நின்று வரவேற்றனர்.மாலை, 4:30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நின்றிருந்த பா.ஜ.,வினர், பிரதமர் மோடியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

அங்கு, முதல்வர் ஸ்டாலினை வரவேற்க வந்த தி.மு.க.,வினர், ஸ்டாலினை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.அந்த இடத்தில் இருந்து பா.ஜ.,வினரை வெளியேறும்படி, தி.மு.க.,வினர் கூறினர். இதனால், தி.மு.க., - பா.ஜ., தொண்டர்கள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. போலீசார் வந்து, பா.ஜ., தொண்டர்களை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறினர். அதை ஏற்காத பா.ஜ., வை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், 'தி.மு.க.,வினரின் அராஜகம் ஒழிக' என்று கோஷங்களை எழுப்பியபடி, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அந்த சாலையில், 20 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உடனே, போலீசார் விரைந்து, பா.ஜ.,வினருடன் பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்துசென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X