ஜி.எஸ்.டி., மாதாந்திர 'ரிட்டர்ன்' தாக்கல்:'‛டாப் 10' இடத்தில் தினமலர்

Updated : மே 27, 2022 | Added : மே 26, 2022 | |
Advertisement
மதுரை,-ஜி.எஸ்.டி., மாதாந்திர 'ரிட்டர்ன்' தாக்கல் செய்ததில் மதுரை கோட்ட அளவில் 'டாப் 10' ல் இடம்பெற்ற தினமலர் நாளிதழை பாராட்டி, அதன் முதன்மை பொதுமேலாளர் மீனாட்சிசுந்தரம் - நிதி, பொது மேலாளர் கீதாவிடம் -ஆடிட், வணிக வரி மதுரை கோட்ட இணை கமிஷனர் குறிஞ்சிசெல்வன் பதக்கம் வழங்கினார்.95 சதவீதம்மதுரையில் வணிகவரித்துறை சார்பில் வணிகர்களுக்கான பாராட்டு விழா மற்றும் குறைதீர்
ஜி.எஸ்.டி., மாதாந்திர 'ரிட்டர்ன்' தாக்கல்:'‛டாப் 10' இடத்தில் தினமலர்

மதுரை,-ஜி.எஸ்.டி., மாதாந்திர 'ரிட்டர்ன்' தாக்கல் செய்ததில் மதுரை கோட்ட அளவில் 'டாப் 10' ல் இடம்பெற்ற தினமலர் நாளிதழை பாராட்டி, அதன் முதன்மை பொதுமேலாளர் மீனாட்சிசுந்தரம் - நிதி, பொது மேலாளர் கீதாவிடம் -ஆடிட், வணிக வரி மதுரை கோட்ட இணை கமிஷனர் குறிஞ்சிசெல்வன் பதக்கம் வழங்கினார்.95 சதவீதம்

மதுரையில் வணிகவரித்துறை சார்பில் வணிகர்களுக்கான பாராட்டு விழா மற்றும் குறைதீர் கூட்டம் நடந்தது. உதவி கமிஷனர் வெங்கடேஷ் வரவேற்றார். அதிக வரி செலுத்திய மற்றும் உரிய நேரத்தில் 'ரிட்டர்ன்' தாக்கல் செய்த நிறுவனங்களுக்கு பதக்கங்கள் வழங்கி இணை கமிஷனர் குறிஞ்சிசெல்வன் பேசியதாவது:மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை கோட்டத்தில் 95 சதவீதம் பேர் ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் தாக்கல் செய்து முன்னிலையில் உள்ளோம். 68 ஆயிரத்து 314 டீலர்கள் இக்கோட்டத்தில் உள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மதுரை கோட்டம் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த மாதம் 65 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

வணிகர்நல வாரியத்திலும் 8,300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். வணிகர்கள் அறியாமையால் செய்யும் சில தவறுகளால் அதிக அபராதம் கட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மாதந்தோறும், 20ம் தேதிக்குள் ரிட்டர்ன் தாக்கல் செய்து வட்டி கட்டும் நிலையிலிருந்து தவிர்க்கலாம். அதற்கேற்ப உங்கள் வணிகத்தை, சந்தை, நிர்வாக செலவுகளை மாற்றிக் கொள்ளலாம். விற்கும் பொருட்களுக்கு எவ்வளவு சதவீத வரி என்பதை நீங்களும் தெரிந்து கொள்வதன் மூலம் வரி அபராதத்திலிருந்து தப்பிக்கலாம்.

ஜி.எஸ்.டி.,யில் அடிக்கடி மாற்றங்கள் வருவதால் ஆடிட்டர்கள் எவ்வளவு வரி பதிவு செய்கின்றனர் என்பதை கவனிப்பது நல்லது.மதுரை கோட்டத்தில் 106 சங்கங்கள் உள்ளதால், 10 சங்கங்களுக்கு ஒரு உதவி கமிஷனர் தலைமையில் கமிட்டி அமைத்து வணிகர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.துணை கமிஷனர்கள் வெண்ணிலா, தங்கம், சுதா, லட்சுமிநாராயணன், கார்த்தி, சத்தியதிலகம் கலந்து கொண்டனர்.உதவி கமிஷனர் தர்மர் நன்றி கூறினார்.
முதல் 10 இடங்கள்

மதுரை கோட்ட அளவில் அதிக வரி செலுத்திய நிறுவனங்களில் 'மன்னா புட்ஸ்' முதலிடம், ஆர்.ஆர்.இன்ப்ரா கன்ஸ்ட்ரக்ஷன் 2ம் இடம், ஜெயகிருஷ்ணா பிளவர் மில் 3ம் இடம் பெற்றன. மதுரை கிழக்கில் பீமா ஜூவல்லரி, அரவிந்த் ஆப்டிக்கல்ஸ், ஜெ.என்.மிஷனரிஸ், மேற்கில் சுசீ கார்ஸ், குஞ்சரவள்ளி மெடிக்கல் எய்டு, அனுஜ் டிரேட் லிங்க் ஆகியன முதல் மூன்று இடங்களை பெற்றன. உரிய காலத்தில் மாதாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்ததில், மான் கன்ஸ்ட்ரக் ஷன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, அபராஜிதா பவுண்டேஷன், 'தினமலர்' நாளிதழ், குஜராத் ெஹவி கெமிக்கல்ஸ், சாத்துார் வெங்டேஸ்வரா பேப்பர்ஸ்.நாகா லிமிட்டெட், ஸ்டெர்லிங் ஹாலிடே, பிரகாஷ் பேப்பர், சிரியஸ் ஜிப் பாஸ்ட்னர்ஸ் ஆகியன முதல் 10 இடங்களை பெற்றன.


Advertisement


வாசகர் கருத்து

Bhaskaran - Chennai,இந்தியா
27-மே-202205:42:28 IST Report Abuse
Bhaskaran ஒரு தகர ஷீல்டு கொடுப்பாங்க மற்றபடி ஒழுங்காக கட்டியவர்களுக்கு ஒரு நன்மையும் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X